காதணியின் காதலர்களா நீங்கள்? உங்கள் அழகை மெருகேற்ற 6 டிப்ஸ்...

Earrings
Earrings
Published on

கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும் பெண்களுக்கு பொருத்தமான உடைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகப் பெரிய வேலையாக இருக்கும். அதற்கடுத்த பெரிய வேலை, பொருத்தமான நகைகளை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் குழப்பம்தான். தங்கள் அழகை தனித்துவமாக வெளிக்காட்டுவதில் ஆர்வம் இல்லாத பெண்களே கிடையாது. அந்த வகையில் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் அழகை வெளிக்காட்ட விரும்புவார்கள்.

ஒரு சிலர் மேக்கப் மூலம் தங்களை அழகுபடுத்துவார்கள்; ஒரு சிலர் உடைகளை மூலம் அழகுபடுத்தி கொள்வார்கள்; இன்னும் சிலர் வெவ்வேறு வண்ணங்களில் வெவ்வேறு டிசைன்களில் ஏராளமான காதணிகள் அணிந்து தங்களை அழகுபடுத்தி கொள்வார்கள். அந்த வகையில் காதணி பிரியர்கள் தங்களை தனித்துவமான அழகுடன் காட்டுவதற்கான சில டிப்ஸ்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. உங்கள் முக வடிவத்திற்கு ஏற்ப காதணிகளை தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு வட்டமான முகம் இருந்தால், கோண அல்லது வெவ்வேறு வடிவங்களில் உள்ள காதணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் உங்களை மேலும் மெருகேற்றி காண்பிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
அழகான பிங்க் உதடுகள் வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணிப் பாருங்கள்!
Earrings

2. நீளமான தலைமுடி இருப்பவர்கள், முடிகளில் சிக்காத காதணிகளைத் தேர்வு செய்யலாம் அல்லது காதணிகளுக்கேற்ப உங்களது ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்ளலாம். முடியை விரித்து போடாமல் பின்னுவது மூலமாகவோ, சுருட்டி கட்டுவதன் மூலமாகவோ காதணிகளை மையப்படுத்தி காண்பிப்பதோடு, உங்களை தனித்துவமாகவும், ஸ்டைலாகவும் காண்பிக்க முடியும். குட்டையான முடி இருந்தால், தைரியமாக தொங்கும் காதணிகளை அணிந்துகொள்ளல்லாம்.

3.தங்கம், வெள்ளி மற்றும் ரோஸ் தங்கம் போன்ற பல்வேறு உலோக காதணிகள் கொண்டும், வெல்வெட், மீனாகாரி, டெரக்கோட்டா காதணி போன்ற handmade காதணிகளை கொண்டும் உங்கள் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கலாம்.

4. மெல்லிய செயின்களுடன் தடிமனான காதணிகளையும், தடிமனான நெக்லஸ்களுடன் சிறிய, சிம்பிளான காதணிகளையும் அணியலாம். இது ஒரு புதுவிதமான ஸ்டைலாகவும், பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணமாகவும் இருக்கும்.

5. சாதாரண நிகழ்வுகளுக்கு விளையாட்டுத்தனமான ஸ்டட்களைத் தேர்வு செய்யலாம். முக்கிய நிகழ்ச்சியில் தடிமனான, நீளமான, வண்ணமயமான காதணிகள் அல்லது ஸ்டேட்மென்ட் ஸ்டட்கள் போன்ற கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கண்களைக் கவரும் வகையிலும் காதணிகளை தேர்வு செய்யலாம்.

6. உங்களுக்கு Cold skin tone-னாக இருந்தால், வெள்ளி அல்லது நீல நிற காதணிகளை அணிந்து கொள்ளலாம். உங்களுக்கு warm skin tone-னாக இருந்தால், தங்கம் அல்லது மஞ்சள் நிற காதணிகளை அணிந்து கொள்வதன் மூலம் தங்களை எடுப்பாக காண்பிக்க முடியும்.

அப்புறம் என்ன! காதணி பிரியர்களே 'காதோரம் லோலாக்கு' என்று பாடிக்கொண்டே கலக்க வேண்டியதுதானே.!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com