உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத பெண்கள் இருக்க முடியாது. இதற்காக கொரிய பெண்கள் இயற்கையாகவே பயன்படுத்தும் சிலப் பொருட்கள் அவர்கள் உதட்டை பிங்க் நிறத்தில் வைப்பதோடு மட்டுமில்லாமல், மிருதுவாகவும் மாற்றுகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.Lip Care Routine.
சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமில்லாமல் உதட்டையும் அவ்வப்போது பராமரிப்பது அவசியமாகும். Lip scrub ஐ தொடர்ந்து பயன்படுத்துவதால், உதட்டில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி உதடு பார்ப்பதற்கு மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
2.Hydrated Lips.
கொரிய பெண்களின் அழகின் ரகசியமே அவர்களுடைய சருமத்தையும் சரி, உதட்டையும் சரி எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதுதான். Hyaluronic acid, Shea butter, Natural oils கொண்ட நல்ல லிப் பாம்மை பயன்படுத்தி உதட்டை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது நல்லதாகும்.
3.Natural remedies.
உதட்டை மென்மையாகவும், பிங்க் ஆகவும் மாற்ற இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். தேன் மற்றும் சர்க்கரையை எக்ஸ்பாலியேட்டராக பயன்படுத்தலாம். இதனால் உதட்டில் உள்ள கருமை நிறம் மாறும். ரோஸ் வாட்டரை உதட்டில் பயன்படுத்துவதால், உதட்டை ஈரப்பதத்துடன் வைப்பது மட்டுமில்லாமல் இயற்கையாகவே பிங்க் நிறத்தை கொடுக்கும்.
4.Lip tints and balms.
லிப் பாம் பயன்படுத்துவதால் உதடுகளுக்கு இயற்கையான பிங்க் நிறத்தை கொடுக்கும். உதட்டிற்கு Peppermint oil பயன்படுத்துவதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உதட்டை Plumping effect உடன் காட்டும். உதட்டிற்கு Collagen, hyaluronic acid மாஸ்க் பயன்படுத்துவதால் இயற்கையான பளபளப்பு மற்றும் பிங்க் நிறத்தைக் கொடுக்கும்.
5.Healthy choices.
நம்முடைய உடல்நிலை ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது உதட்டையும் பாதிக்கும். எனவே, நிறைய தண்ணீர் அருந்தவேண்டும், விட்டமின், மினரல் கொண்ட Balanced diet எடுத்துக்கொள்ள வேண்டும். காபி மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். இந்த பழக்கம் உதட்டை கருமையாக மாற்றிவிடும். இந்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்றினால் நிச்சயமாக பிங்க் நிற உதடுகளை சுலபமாகப் பெறமுடியும்.