இந்தியர்களுக்கான 7 முடி பராமரிப்புக்கான வழிமுறைகள்! 

7 Hair Care Tips for Indians!
7 Hair Care Tips for Indians!

இந்தியப் பெண்களுக்கு அவர்களின் தலைமுடிதான் அழகின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எனவே எல்லா பெண்களும் அவர்களது முடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் மாசுபாடு, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் முறையற்ற கவனிப்பு காரணங்களால், முடிப் பராமரிப்பு சவாலாக இருக்கிறது. எனவே இப்பதிவில் இந்தியர்கள் தங்களின் முடியை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதற்கான 7 வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. உங்கள் முடிவகையைப் புரிந்து கொள்ளுங்கள்: உங்களது முடியை முறையாகப் பராமரிப்பதற்கு முதலில் உங்கள் முடியின் வகையைப் புரிந்து கொள்வது அவசியம். இந்தியர்களின் முடி பொதுவாகவே நேராக, அலை அலையாக மற்றும் சுருள் போன்ற வகைகளில் இருக்கும். ஒவ்வொரு முடி வகைக்கும் குறிப்பிட்ட தேவைகளும், பராமரிப்பு நடவடிக்கைகளும் உள்ளது. எனவே உங்களது முடிவகையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

2. உள்ளிருந்து ஊட்டமளிக்கவும்: ஆரோக்கியமான முடி என்பது நமது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களில் இருந்து தொடங்குகிறது. புரதம் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவை நீங்கள் பெறுவது மூலமாக, ஆரோக்கியமான கூந்தலை நீங்கள் பெற முடியும். முடி வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள், கீரைகள், விதைகள் மற்றும் லீன் புரதங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

3. சரியான முடி பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்: முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க ஏதோ ஒரு ப்ராடக்ட் பயன்படுத்துவோம் என்றில்லாமல், உங்கள் முடிக்கு ஏற்ற தரமான பராமரிப்பு பொருட்களில் முதலீடு செய்யுங்கள். குறிப்பாக ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களைத் தேர்வு செய்யும்போது அதிகப்படியான சல்பேட் இல்லாமல் பார்த்து வாங்குங்கள். 

4. எண்ணெய் மசாஜ்: பாரம்பரிய முடி பராமரிப்பு நடைமுறைகளில் எண்ணெய் மசாஜ் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதற்கு தேங்காய், பாதாம் மற்றும் ஆமணக்கு எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது மூலமாக, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் மயிர்க் கால்களுக்கு ஊட்டம் கிடைத்து முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.  

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையின் 7 குறைத்து மதிப்பிடப்பட்ட அறிவுரைகள்!
7 Hair Care Tips for Indians!

5. மாசுக்களில் இருந்து தலைமுடியை பாதுகாக்கவும்: பொதுவாகவே இந்தியாவின் பல நகரங்கள் காற்று மாசுபாட்டுக்கு பெயர் போனவை. இது உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும். எனவே வெளியே செல்லும்போது தலையில் தாவணி அல்லது தொப்பி பயன்படுத்தி பாதுகாப்பாக மூடவும். 

6. இயற்கை முறையைப் பின்பற்றுங்கள்: இந்தியாவில் தலைமுறைக்கு ஊட்டம் கொடுக்கும் இயற்கை பொருட்கள் அதிகம் உள்ளது. நெல்லிக்காய், மருதாணி, சீகைக்காய் மற்றும் வெந்தய விதைகள் போன்றவற்றை தலைமுடிக்கு பயன்படுத்துவதால், இயற்கையாகவே தலைமுடி வலுபெறும். இவற்றைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடிக்கான மாஸ்கையும் வீட்டிலேயே தயாரித்து உபயோகிப்பது நல்லது.

7. அவ்வப்போது ட்ரிம் செய்யவும்: உங்கள் தலைமுடியை அவ்வப்போது ட்ரிம் செய்வதால் பிளவு பட்ட முனைகள் அகற்றப்படுகிறது. இதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது மேற்கொண்ட சேதத்தைத் தடுத்து தலை முடியை ஆரோக்கியமாகவும் அதன் அழகைப் பராமரிக்கவும் உதவுகிறது. எனவே மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது நல்ல சிகையலங்கார நிபுணரை அணுகி முடியை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com