வாழ்க்கையின் 7 குறைத்து மதிப்பிடப்பட்ட அறிவுரைகள்!

7 Underrated Life Advice.
7 Underrated Life Advice.
Published on

இன்றைய வேகமாக நகரும் உலகில், வாழ்க்கையின் பல சவால்களை கடந்துசெல்ல பல ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் தேடுகிறோம். ஆனால் நன்கு அறியப்பட்ட, மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் அறிவுரைகள் ஏராளமாக இருந்தாலும், சில அறிவுரைகள் என்றுமே மக்களால் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. இந்தப் பதிவில் அப்படி குறைத்து மதிப்பிடப்பட்ட 7 அறிவுரைகள் பற்றி பார்க்கலாம்.

1. தோல்வியைத் தழுவுங்கள்: தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படியாகும். இது நாம் கற்க முடியாத பல விஷயங்களை கற்பிக்கிறது. நம் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற பல படங்களை தோல்வியே வழங்குகிறது. எனவே ஒருபோதும் தோல்வியடைவதை நினைத்து கவலைப்படாதீர்கள். 

2. நன்றியுணர்வுடன் இருங்கள்: இப்போது இந்தத் தருணத்தில் உங்களிடம் இருக்கும் விஷயங்களை நினைத்து நீங்கள் எப்போதுமே நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். ஆனால் நாம் யாருமே அப்படி இருப்பதில்லை. நம்மிடம் இருக்கும் விஷயங்களை விட, இல்லாததை நினைத்து அதிகம் கவலை கொள்கிறோம். இது நம் மனநிலையையும் மகிழ்ச்சியையும் கெடுத்துவிடுகிறது. 

3. உங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்: எதுவாக இருந்தாலும், முதலில் நம்மை நாம் கவனத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். நம் உடலுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை செய்வது மூலமாகவும், ஓய்வெடுப்பது மூலமாகவும் வாழ்க்கையில் நாம் நிச்சயம் சிறப்பாக மாற முடியும். எனவே எல்லா தருணங்களிலும் உங்கள் மீதான கவனிப்பு மிக முக்கியம்.

4. தனிமையில் நேரம் செலவிடுங்கள்: தனிமையில் நேரம் செலவழிப்பது மூலமாக உங்களைப் பற்றி அதிக விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வாழ்க்கை மீதான தெளிவு போன்றவற்றை தனிமையே கற்றுத் தருகிறது. எனவே தனியாக சில விஷயங்களைச் செய்ய ஒருபோதும் தயங்காதீர்கள். 

5. Imperfection தவறில்லை: எல்லா மனிதர்களுமே தாங்கள் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எல்லா விஷயங்களையும் எந்தக் குறையும் இல்லாமல் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். இத்தகைய மனநிலையே அவர்களை எதையும் செய்யவிடாமல் தடுக்கிறது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த பெர்பெக்ஷனுடன் சில விஷயங்களை செய்வது மூலமாகவே, முன்னேற்றத்தை நாம் அடைய முடியும். 

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் உணவில் நெய் சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா?
7 Underrated Life Advice.

6. மற்றவர் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள்: பிறர் சொல்வதை அமைதியாகக் கூர்ந்து கவனிப்பதே மிகப்பெரிய திறமைதான். தேவையில்லாமல் பேசுவதை விட, கூர்ந்து கவனிப்பதன் மூலமாகவே நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இந்தத் திறன் உங்களை பல விஷயங்களுடன் ஆழமாக இணைக்க உதவுகிறது.

7. ரிஸ்க் எடுங்கள்: உங்களுடைய Comfort Zone-னுக்கு வெளியே பல விஷயங்களை முயற்சிப்பதால், உங்களுடைய உண்மையான ஆற்றல் வெளிப்படும். தைரியமாக நீங்கள் எடுக்கும் முடிவுகள், உங்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், புதிய வாய்ப்புகளுக்கும், சுயக் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே வாழ்க்கையில் விரைவாக ஏதாவது ரிஸ்க் எடுத்து அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com