சருமத்துளைகளை சரி செய்ய 7 டிப்ஸ்!

 skin fix pores
skin fix pores
Published on

'முகத்தை அழகாக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறேன். ஆனால் இந்த சருமத்துளைகளை மறைய வைப்பது கஷ்டமாக இருக்கிறது' என பலர் கூறுகின்றனர்.

சருமத்துளையில் அழுக்குப் படிவதால் முகப்பரு, கரும்புள்ளிகள், முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே சருமத்துளையை முதலில் சரி செய்வது நல்லது.

சருமத்தில் துளைகள் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. நீர்ச்சத்து குறைபாடு, அதிக ரசாயனப் பயன்பாடு, ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம், பதட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் பாதிப்பு என ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இவற்றை சரிசெய்ய வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.

சருமத்துளையை சரி செய்ய 7 டிப்ஸ்!

ஆவி பிடிப்பது

ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து உங்கள் கழுத்திலிருந்து தலை வரை ஒரு கனமான போர்வையால் மூடி ஆவி பிடிக்க வேண்டும். இதனால் முகத்தில் அதிக நீர் வெளியேறுவதோடு, சருமத்தில் இருக்கும் அழுக்குகளும் நீங்கி விடும்.

இதையும் படியுங்கள்:
அழகு சேர்க்க நினைத்து ஆபத்தை சேர்க்காதீர்கள்!
 skin fix pores

ஐஸ்கட்டி

ஐஸ்கட்டியை எடுத்து சுத்தமான துணியில் சுற்றி முகத்தில் நன்றாக 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கவும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் அளிக்கும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை சருமத்துளைகளில் தடவி, சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். பின் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். கற்றாழை சருமத்துக்கு நீரேற்றம் கொடுப்பதோடு, சருமத்துளைகளை இறுக வைக்கும்.

தேன்

தேவையான அளவு தேன் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். மூக்கு, கன்னங்களுக்கு அருகில்தான் சருமத்துளைகள் நிறைந்திருக்கும். அதனால் அங்கு மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும். தினசரி அல்லது வாரம் மூன்று முறை இதை பயன்படுத்தலாம். தேன் சருமத்தை இறுக்கி துளைகளை மூடக்கூடிய பண்புகளை கொண்டுள்ளது. இது சிறந்த இயற்கை மாய்சுரைசராகவும் செயல்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளுடன் எலுமிச்சைசாறு சொட்டு சேர்த்து, கூழாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இது போல் வாரம் இரண்டு முறை செய்யலாம். வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது என்பதால், இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்துளைகளை இறுக செய்கின்றன.

ஆப்பிள்

இரவு நேரத்தில் முகம் கழுவி சுத்தம் செய்து, ஆப்பிள் சாறு வினிகர் உடன் தண்ணீர் சம அளவு சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். மறுநாள் காலை முகத்தை நீரில் கழுவ வேண்டும். இது சருமத்துளைகளை சுத்தப்படுத்தி அதை இறுக செய்யும். இதை சரியான முறையில் பயன்படுத்தும் போது சருமத்துளைகள் இறுகுவதை பார்க்க முடியும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தோலை கொண்டு முகத்தில் 10-15 நிமிடங்கள் வரை பொறுமையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாழைப்பழத்தோலில் இருக்கும் லுடின் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக உள்ளது. இது பொட்டாசியத்துடன் சேர்ந்து சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்துளைகளையும் இறுக செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com