அழகு சேர்க்க நினைத்து ஆபத்தை சேர்க்காதீர்கள்!

Skincare
Skincare
Published on

சருமத்தை பராமரிப்பதில் ஆண், பெண் இருபாலாருமே அதிக அக்கறை கொள்கின்றனர். வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை வைத்தே சருமத்தை எப்படி பராமரிப்பது என இணையத்தில் எக்கச்சக்க டிப்ஸ் நிறைந்துள்ளன. அதை தெரிந்துக்கொண்டு அழகிற்கு அழகு சேர்க்க நினைத்து எந்த பொருட்களை பயன்படுத்தலாம் எந்த பொருட்களை பயன்படுத்த கூடாது என அறியாமல், பார்க்கும் டிப்ஸ் எல்லாம் ட்ரை பண்ணுவது உங்களை சிக்கலில் தள்ள நேரிடலாம்.

சருமத்திற்கு எந்த பொருட்களை பயன்படுத்தலாம் என பார்க்கும் நாம், எந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது என பார்க்க தவறுவது ஏன்? சிலருக்கு ஆயில் சருமம், சிலருக்கு வறண்ட சருமம் என வேறுபடும். ஆனால் சருமம் என்று பார்க்கும் போது சில பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது. இதை தெரிந்துக் கொள்ளாமல் சிலர் முகத்தை அழகாக்குவதை மட்டும் நோக்கமாக கொண்டு சில பொருட்களை பயன்படுத்தி அதிக சரும பிரச்னையில் மாட்டிக் கொள்கின்றனர். எந்த பொருட்கள் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்!

வெள்ளை சர்க்கரை

  • சமையல் பொருளான சர்க்கரையை வீட்டில் தயாரிக்கப்படும் ஃபேஸ் ஸ்க்ரப்களில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சர்க்கரையில் உள்ள கூர்மையான விளிம்புகள் உணர்திறன் வாய்ந்த முக திசுக்களை சேதப்படுத்தக் கூடும்.

  • முகப்பரு உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளை உப்பு அல்லது சர்க்கரையை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவற்றின் பயன்பாடு, வடுக்கள், சருமம் சிவந்து போவது, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
வறண்டு போகும் உதடுகள்... அச்சச்சோ! என்ன செய்யலாம்?
Skincare

லவங்கப்பட்டை

  • லவங்கப்பட்டையை நேரடியாக முகத்தில் பூசுவது ஆபத்தானது. நீங்கள் நன்றாக கவனித்திருந்தால் தெரியும், எந்த வகை அழகு சாதன பொருட்களிலும் லவங்கப்பட்டை பெரும்பாலும் பயன்படுத்த மாட்டார்கள்.

  • மென்மையான சருமத்திற்கு லவங்கப்பட்டை நல்லது என்று சிலர் கூறுவார்கள். உண்மையில் லவங்கப்பட்டை நன்மை அளிக்குமா? என்பதை தெரிந்துக் கொண்டு பயன்படுத்தலாம். ஆனால் நேரடியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

சோடா உப்பு

  • பேக்கிங் சோடாவைக் கொண்டு ஃபேஸ் வாஷ் செய்வது, ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. ஏனெனில், இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி, பாக்டீரியா தொற்று, முகப்பரு, பிக்மென்டேஷன் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

வெஜிடபிள் ஆயில்

  • சருமத்தில் தாவர எண்ணெய் எனப்படும் வெஜிடபிள் ஆயிலை பயன்படுத்துவதால் பலருக்கு சாதகமான முடிவுகளே கிடைத்தாலும், சிலர் எதிர்வினைகளால் பாதிக்கப்படலாம். ஏனெனில், சுத்திகரிக்கப்படும் தாவர எண்ணெய்கள் ரசாயனங்களைக் கொண்டு பதப்படுத்தப்படுகிறது. இது சிலரின் சருமத்திற்கு பிரச்னையை ஏற்படுத்தலாம்.

  • உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், குளிர் அழுத்தமூட்டப்பட்ட (cold-pressed) மற்றும் ஆர்கானிக் எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எலுமிச்சை பழம்

  • எலுமிச்சையில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக்கவும், கருமையை அகற்றவும் உதவியாக இருக்கும் என்பதால், பலரும் அதனை நேரடியாக முகத்தில் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரியுமா? 

  • எலுமிச்சை பழத்தில் அமிலத் தன்மை நிறைந்திருப்பதால் சருமத்தின் pH சமநிலையை சீர்குலைத்து, கடுமையான ஒவ்வாமை அதிகப்படியான வறட்சி, சருமம் சிவந்து போதல் மற்றும் உரிதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

  • முகத்தின் மீது எலுமிச்சை பழத்தை நேரடியாக பயன்படுத்துவதற்கு பதிலாக, சில துளி எலுமிச்சை சாற்றை ஃபேஸ்பேக், குளியல் பொடி ஆகியவற்றில் கலந்து பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும்.

அழகை மட்டும் நோக்கமாக கொண்டு சருமத்தை பராமரிக்காமல், சருமத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் நம் சருமத்தில் எப்படி செயல்படும் என்பதை தெரிந்து சருமத்தை பாதுகாப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com