ஆசிய பெண்களின் 8 அழகு ரகசியங்கள்! இதனைத் தொடர்ந்து செய்யுங்கள்!

பெண்களின் முகப் பொலிவு...
பெண்களின் முகப் பொலிவு...pixabay.com

பெண்களின் முகம் பொலிவுடன் இருப்பதற்கு அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை மற்றும் காலநிலை ஆகியவை காரணங்களாக இருக்கும். மேலும் சிலருக்கு மரபியல் காரணங்களும் இருக்கும். அதேபோல் காலநிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு நமது சருமத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியம். அந்தவகையில் இந்த 8 வழிகளைப் பின்பற்றுங்கள்:

சூரிய ஒளியிலிருந்து சருமத்தை காத்தல்:

துதான் மிகவும் முக்கியமான மற்றும் அனைத்து அழகு குறிப்புகளுக்கும் முதன்மையான ஒன்று. முகத்தில் சுருக்கங்கள், கண்களை சுற்றி கருப்பு வளையங்கள், கண்களுக்கு கீழ் ஏற்படும் கோடுகள், வயதான தோற்றம் போன்றவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சூரிய ஒளியின் யூவி அலைகள்தான். வெயிலில் செல்லும்போது தொப்பி, சன்ஸ்கிரீன், குடை ஆகியவை பயன்படுத்துவது நல்லது. தினமும் தொடர்ந்து சன்ஸ்கீர்ன் பயன்படுத்துவது உங்கள் அழகைப் பராமரிப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்று.

மென்மையான க்ளென்சிங்
மென்மையான க்ளென்சிங்pixabay.com

மென்மையான க்ளென்சிங் மற்றும் இரட்டை க்ளென்சிங்:

மென்மையான க்ளென்சிங்கை மேக்கப் பயன் படுத்திவிட்டு அதனை நீக்குவதற்காக பயன்படுத்தவது.

இரட்டை க்ளென்சிங் அல்லது டபுல் க்ளென்சிங்கை வாட்டர் ப்ரூஃப் மேக்கப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.

மேக்கப்பை நீக்கும்போது இந்த வகையான க்ளென்சிங் பயன்படுத்துவதால் சருமம் உலராமல் இருக்கவும். மேலும் வயதான தோற்றம் வராமல் இருக்கவும் உதவும்.

ஹைட்ரேஷன் மற்றும் மாய்ஸ்சரைஷன்:

ருமம் இளமையாக இருக்க உதவும் ஒன்றுதான் ஹைட்ரேஷன். சருமத்திற்கான அழகுப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் முதலில் மாய்ஸ்ரைஷிற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். பொதுவாக மாய்ஸ்சரைஷரில் சருமத்தை உலராமல் தடுக்க உதவும் ஹைல்ரோனிக் அமிலம் மற்றும் சிரமைட்ஸ் ஆகியவை உள்ளன. இது மிருதுவான சருமத்திற்கு உதவும். மேலும் சருமத்தில் சுருக்கங்கள் விழாமலும், கோடுகள் விழாமலும் இருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
வீசி எறியும் பூண்டு தோலில் இத்தனை நன்மைகளா?
பெண்களின் முகப் பொலிவு...

இயற்கை பொருட்கள்:

ருமத்தை அழகாக்க இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது ஆசிய பெண்களின் பழமையான முறை. அதாவது மஞ்சள், அரிசி தண்ணீர், தேன், க்ரீன் டீ ஆகியவை வெளிச்சூழலினால் சருமத்திற்கு ஏற்படும் கேடுகளைத் தடுக்க உதவும். இவைகள் சருமத்தைப் பாதுகாக்கும் மாபெரும் பொறுப்பை ஆற்றி வருகிறது. ஆகையால் இயற்கைப் பொருட்களைத் தினமும் பயன்படுத்த வேண்டும்.

மசாஜ்:

தினமும் முகத்திற்கு மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் முகத்தில் உள்ள தசைகளைத் தளர்வாக வைத்துக்கொள்ள உதவும். ஆகையால் தினமும் காலை அல்லது இரவு எண்ணெய் தேய்த்துவிட்டு ஒரு 15 நிமிடங்கள் முகத்திற்கு மசாஜ் செய்வது நல்லது.

உணவு முறைகள்:

ரோக்கியமான சருமத்திற்கு சீரான உணவு முறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். அதாவது காய்கறிகள், மீன், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் (உதாரணத்திற்கு க்ரீன் டீ) ஆகியவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் உணவில் சர்க்கரை, உப்பு ஆகியவைக் குறைவாக எடுத்துக் கொள்வதால் சரும பிரச்சனைகள் வராமல் இருக்க உதவும்.

மேக்கப்
மேக்கப்pixabay.com

குறைவான மேக்கப்:

பொதுவாக ஆசியாவில் உள்ள பெண்கள் தினமும் அதிக மேக்கப் போடமாட்டார்கள். அதாவது அதிக ஃபௌண்டேஷன் போடுவது எதாவது முக்கியமான நிகழ்ச்சிக்கு செல்லும்போதுதானே தவிர அடிக்கடி பயன்படுத்த மாட்டார்கள். அது மிக மிக நல்ல விஷயம். ஏனெனில் சருமத்திற்கு ஓய்வென்பது மிகவும் அவசியம். நாம் மூச்சு விடுவது போல் சருமம் மூச்சு விடுவதும் அவசியம். அதற்கு நாம் கட்டாயம் தினமும் ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

சரும பராமரிப்பைத் தொடர்ந்து செய்யுங்கள்:

தினமும் சருமத்தைப் பராமரிப்பது அவசியம். தொடர்ந்து க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைஷர், சன்ஸ்கிரீன் போன்றவை பயன்படுத்த வேண்டும். இதனால் உங்களுடைய சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com