வீசி எறியும் பூண்டு தோலில் இத்தனை நன்மைகளா?

Benefits of Garlic Skin
Benefits of Garlic Skinhttps://www.youtube.com
Published on

பூண்டை உரித்து பயன்படுத்தும்போது அதன் தோலை வெளியில் எறிந்து விடுகிறோம். அப்படிச் செய்யாமல் அதன் தோலை ஈரம் படாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

1. பூண்டில் எந்த அளவு மருத்துவ குணம் உள்ளதோ அதே அளவு அதன் தோலிலும் உள்ளது.

2. சிலருக்கு தலைக்கு குளித்தாலே சளி, தொடர் தும்மல் என அவதிப்படுவார்கள். இதற்கு தலைக்கு குளித்துவிட்டு வந்ததும் சாம்ராணி தூபம் போடும்போது அதில் சிறிது காய்ந்த பூண்டு தோலை போட, மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் இராது.

3. ஒரு காட்டன் துணியில் ஒரு கைப்பிடி அளவு பூண்டுத் தோலை போட்டு சிறிய மூட்டையாகக் கட்டவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நன்கு சூடுபடுத்தி அடுப்பை அணைத்துவிட்டு அதில் பூண்டு தோல் மூட்டையை வைத்து விட்டு முடிச்சை மெல்ல அவிழ்த்து அதிலிருந்து வரும் புகையை முகர்வது இருமல், மூக்கடைப்பு, சுவாசப் பிரச்னைக்கு நல்லது.

4. பூண்டு தோலை நிறைய சேகரித்து அதனை ஒரு சிறு பையில் போட்டு மூட்டையாகக் கட்டி படுக்கும் தலையணைக்குள் மேலாக வைத்து அதில் தலை வைத்துப் படுத்து உறங்கினால் தலைபாரம் குறையும். மன அழுத்தமும் குறைந்து ரிலாக்ஸாக உணர்வதுடன் ஆழ்ந்த தூக்கமும் வரும்.

5. தலைபாரம், மண்டையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றிற்கு பூண்டு தோல் புகை நல்லது.

6. பேன் தொல்லை போவதற்கும் பூண்டு புகை நல்லது. தலைக்கு குளித்ததும் போடும் சாம்பிராணியில் சிறிதளவு பூண்டு தோலை போட்டு தலை முழுவதும் காண்பிக்க, தலையில் பேன் தொல்லை இராது.

7. பூண்டு தோலை தோட்டத்தில் செடிகளுக்கு போட, சிறு பூச்சிகள், எறும்புகள் செடிகளைத் தாக்காது. அத்துடன் செடிகளுக்கு சிறந்த இயற்கை உரமாகவும் அமையும்.

இதையும் படியுங்கள்:
உடல் சூட்டை தக்க வைக்கும் குளிர் கால ஸ்நாக்ஸ்!
Benefits of Garlic Skin

8. பூண்டு தோலை காய வைத்து மிக்ஸியில் பொடித்து அத்துடன் உப்பு கலந்து வைத்துக் கொண்டு சமைக்கும் உணவுகளுக்கு மேலாக தூவி கிளற அதிக மணம் மற்றும் சுவையைக் கொடுக்கும்.

9. பூண்டு தோலை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைத்து சில நாட்கள் கழித்து சாலட் ட்ரெஸ்ஸிங்குக்கு பயன்படுத்தலாம்.

10. டீ தயாரிக்கும்போது இந்த பூண்டு தோலை சேர்த்து கொதிக்க விட, நல்ல மணமும் ருசியும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com