கோடையில் உங்க தலைமுடி அதிகமா உதிருதா? கேரட்டை இப்படி பயன்படுத்துங்க!

Summer Hair Loss
Summer Hair Loss
Published on

கோடைகாலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்போது பலர் தலைமுடி உதிர்தல் மற்றும் அது தொடர்பான பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அதிகப்படியான சூரிய ஒளி, வியர்வை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் மயிர்க்கால்கள் பலவீனமடைந்து, முடி உதிதலுக்கு பங்களிக்கிறது. இதற்காக சந்தையில் ஏராளமான ப்ராடக்டுகள் இருந்தாலும், சில சமயங்களில் இயற்கை வழியிலேயே சிறந்த தீர்வை நாம் காண முடியும். எனவே இப்பதிவில் கோடைகால முடி உதிர்வைத் தடுப்பதற்கு கேரட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

கோடையில் முடி உதிர்தல்: கேரட்டை நம் தலைமுடிக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், கோடையில் முடி உதிர்வதற்கான அடிப்படைக் காரணங்களை முதலில் புரிந்துகொள்வது அவசியம். வெயில் காலத்தில் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களால், தலைமுடியின் வேர்கள் சேதமாகி, உடையக்கூடியதாக இருக்கும். மேலும், வியர்வை மற்றும் எண்ணெய் தலையில் தேங்குவதால், உச்சந்தலையில் சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது தவிர, நீச்சல் குளங்களில் பயன்படுத்தப்படும் குளோரின் மற்றும் கடல் நீரில் உள்ள உப்பு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் மூலமாகவும் முடி உதிர்வு ஏற்படலாம். 

கேரட்டும், முடி வளர்ச்சியும்: கேரட்டில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பயோட்டின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக்கி, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. கேரட்டில் உள்ள சிலிகான், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது. 

இதையும் படியுங்கள்:
ஏன் பெரும்பாலான நபர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதில்லை தெரியுமா?
Summer Hair Loss

கேரட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? 

கேரட் சாறு: கேரட்டை மிக்ஸியில் போட்டு அரைத்து, அதன் சாற்றைப் பிரித்தெடுத்து உச்சந்தலையில் நேரடியாகத் தடவலாம். பின்னர் சில நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து கழுவினால், உச்சந்தலைக்கு ஊட்டம் கிடைத்து, மயிர்க்கால்கள் வலுப்பெறும்.

கேரட் ஹேர் மாஸ்க்: வேகவைத்த கேரட்டை, தேன் மற்றும் தயிருடன் கலந்து ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம். இந்தக் கலவையை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, சுமார் அரை மணி நேரம் அப்படியே விட்டு, கழுவி விடவும். இந்த மாஸ்க் தலையின் ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தலைமுடிக்கு பிரகாசத்தைக் கொடுக்கவும் உதவும்.

கேரட் எண்ணெய்: தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயில் கேரட் துண்டுகளைப் போட்டு, சில வாரங்கள் அப்படியே ஊற வையுங்கள். பின்னர் அந்த எண்ணையை உச்சந்தலை மற்றும் முடியில் தடவி, மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விடுங்கள். இந்த காரட் எண்ணெய் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து முடி உதிர்வைத் தடுக்கிறது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com