வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை தயாரிக்க 8 வழிகள்!

Natural hair dye
Natural hair dye

யற்கையான முறையில் நரை முடியை கறுப்பாக மாற்ற உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகளை இந்தப் பதிவில் காணலாம்.

1. நெல்லிக்காய், வெந்தயம் பேஸ்ட்

பத்து பெரிய நெல்லிக்காய்களை கழுவி, கொட்டைகளை நீக்கிவிட்டு, சிறிதாக நறுக்கி, மிக்ஸ்யில் போட்டு சிறிது நீர் சேர்த்து, மைய  அரைத்துக்கொள்ளவும். மூன்று ஸ்பூன் வெந்தயம் எடுத்து, மிக்சியில் இட்டு பொடியாக்கவும். இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் அரைத்த கலவைகளை சேர்த்து, கலந்து கொள்ளவும். இதை தலையிலும், முடியிலும் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் சிகைக்காய் போட்டு முடியை அலசவும்.
நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் நரை முடிக்கு சிறந்த இயற்கை வைத்தியம் ஆகும்.  இவை நரைப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

2. கருப்பு தேநீர்;

ஒரு கப் தண்ணீரில் 2 டீஸ்பூன் பிளாக் டீத்தூளையும், ஒரு டீஸ்பூன் உப்பும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.  பின் அதை வடிகட்டி குளிர வைத்து, அலசி காய வைத்த  தலைமுடி மீது தடவி உலரவிடவும். இதை அடிக்கடி செய்தால் தலைமுடி கருமையாகும்.

பிளாக் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காஃபின் உள்ளது. கூந்தலுக்கு இயற்கையான கருமையான சாயலைச் சேர்க்கும் அதே வேளையில், முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் பிரகாசத்தை அளிக்கிறது.  தலைமுடி முன்பை விட பளபளப்பாகவும் இருக்கும். 

Natural hair dye
Natural hair dye

3. பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

2:3 என்ற விகிதத்தில் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். உச்சந்தலையிலும் முடியிலும் நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து அலசவும். பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது . எலுமிச்சை சாறு முடிக்கு பொலிவு சேர்ப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

4. மருதாணிப்பொடி மற்றும் காபி பேஸ்ட்;

கொதிக்கும் அரை டம்ளர் சூடான நீரில் 1 டீஸ்பூன் காபி தூள் சேர்க்கவும். ஆறவைத்து வடிகட்டி தேவையான மருதாணித் தூள் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.  இரண்டு மணி நேரம் அதை மூடி வைக்கவும்.  பின் அந்தப் பேஸ்டை தலைமுடியில்  தடவவும்.  ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.


5. கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்

ஒரு கப் கறிவேப்பிலையை ஒரு கப் எண்ணெயில் கருப்பாகும் வரை கொதிக்க வைக்கவும். வடிகட்டி அதை ஒரு பாட்டிலில்  சேமித்து வாரத்திற்கு 2-3 முறை முடியில் மசாஜ் செய்யவும்.
கறிவேப்பிலையில் வைட்டமின் பி நிறைந்துள்ளது மற்றும் மயிர்க்கால்களில் உள்ள நிறமி மெலமைனை மீட்டெடுக்க உதவுகிறது. இதில் உள்ள பீட்டா-கெரட்டின் நரைப்பதையும் முடி உதிர்தலையும் தடுக்கிறது. 

 6. வெங்காய சாறு;

2-3 டீஸ்பூன் வெங்காய சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலக்கவும். உச்சந்தலையிலும் முடியிலும் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவவும். வெங்காயம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது . இது கேடலேஸ் என்ற நொதியை அதிகரிக்கிறது, இதனால் முடி கருமையாகிறது. எலுமிச்சை சாறுடன் இணைந்து, அது கூந்தலுக்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவும் பானங்கள்!
Natural hair dye

7. கருப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு:

இருபது கருப்பு மிளகை அரைத்து , அரை கப் தயிர், அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். முடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரம் மூன்று முறை செய்யவும்.

கருப்பு மிளகு தலைமுடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுவதோடு, முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

8.  செம்பருத்தி இலை, பூ பேஸ்ட்;

செம்பருத்தி இலைகள் இரண்டு கைப்பிடி மற்றும் பத்துப் பூக்களை அரைத்து பேஸ்ட்டாக்கி உச்சந்தலையிலும், தலைமுடியிலும் தடவி, இரண்டு மணிநேரம் கழித்து அலசவும்.செம்பருத்தியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்து முடிக்கு இயற்கையான நிறத்தை அளிக்கிறது. பொடுகு, வறட்சி மற்றும் முடி உதிர்தல் போன்ற பல முடி பிரச்சனைகளை தீர்க்கிறது


இந்த வீட்டு வைத்திய முறை தலைமுடிக்கு போஷாக்கு அளித்து, முடி நரைப்பதை தாமதப்படுத்தும். மேலும் கெமிக்கல் ஷாம்பூவை தவிர்த்து விட்டு, தலைக்கு  சிகைக்காய் பொடியைத் தேய்த்துக் குளித்து வந்தால் நரைப்பதை தள்ளிப் போடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com