உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவும் பானங்கள்!

உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவும் பானங்கள்!
Published on

ண்டிகை நாட்களின்போது வழக்கத்திற்கு மாறாக நெய், சர்க்கரை, புரதம், எண்ணெய், நட்ஸ் போன்ற ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் பட்சணங்களையும் அதிகளவில் உட்கொள்கிறோம். அவ்வாறு உண்ணும்போது நம் உடலின் தேவைக்கு அதிகமான கொழுப்பு, சர்க்கரை போன்றவை உடலுக்குள்ளேயே தங்கி இரைப்பை மற்றும் ஜீரண மண்டலத்திற்குள் நச்சுக்களை உருவாக்கி பலவித உடல் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அவ்வாறான நச்சுக்களை வெளியேற்றி மீண்டும் உடலை ஆரோக்கிய நிலைக்குக் கொண்டுவர சில மூலிகை சேர்ந்த பானங்களைத் தயாரித்து அருந்துவது அவசியமாகிறது. அவ்வாறு அருந்துவதற்கு உகந்த பானங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உங்களின் அன்றைய தினத்தை ஆரோக்கியமாய் ஆரம்பிக்க உதவும். இதிலுள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நச்சுக்களை வெளியேற்றி, நல்ல ஜீரணத்தை ஊக்குவிக்க உதவும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலின் மெட்டபாலிசம் சீராகும்.

க்ரீன் டீ ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. அதிலுள்ள கேடச்சின் என்ற பொருள் நச்சுக்களை வெளியேற்றும் செயலில் ஈரலுக்கு உதவி புரிகிறது. எனவே க்ரீன் டீ அருந்துவது ஆரோக்கியம் தரும்.

வெள்ளரி அதிக நீர்ச்சத்து கொண்டது. புதினா ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது. இரண்டையும் சேர்த்து அரைத்து ஒரு பானமாக கலந்து குடிக்க நீர்ச்சத்தும் ஆன்டி ஆக்சிடன்ட்களும் நச்சு நீக்க உதவும். ஜீரணம் சிறப்புடன் நடைபெறும்.

காலே, பசலை இலைகள், வெள்ளரி, இஞ்சி, லெமன் ஜூஸ் இவை அனைத்தையும் கலந்து ஒரு ஸ்மூத்தி தயாரித்து உட்கொள்ளலாம். பச்சை இலைகளிலுள்ள நார்ச்சத்து ஜீரணத்தை மேம்படுத்தும். இஞ்சி வீக்கத்தை குறைக்கும். மொத்தத்தில் இந்த ஸ்மூத்தி உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்களை அளித்து மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.

‘கோல்டன் மில்க்’ எனப்படும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், தேன் கலந்த வெது வெதுப்பான பாலைக் குடிப்பதால் அதிலுள்ள குர்க்குமின் (curcumin) என்ற பொருளானது வீக்கத்தைக் குறைத்து உடல் நச்சுக்களையும் அகற்றுகிறது.

வெது வெதுப்பான நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடார், வினிகர் கலந்து, கொஞ்சம் தேனும் சேர்த்து சாப்பாட்டுக்கு முன் பருக, ஜீரணம் சிக்கலின்றி நடைபெற்று, மெட்டபாலிசமும் சிறப்பாக நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
செரிமானப் பிரச்னை இருந்தால் தவிர்க்க வேண்டியவை!
உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவும் பானங்கள்!

டேன்டேலியன் என்றொரு மூலிகையானது பசியைத் தூண்டி, ஜீரண மண்டலம் நன்கு செயல்பட உதவும். நச்சுக்களை வெளியேற்றும் செயலில் ஈரலுக்கு உதவி புரியும். இதன் இலைகளைக் கொண்டு டீ போட்டு குடிக்க, உடலிலுள்ள அதிகப்படி நீரை வெளியேற்ற கிட்னிக்கு உதவியாகும்.

இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்கள் உடலின் நீரிழப்பை சரி செய்யும் திறனுடையது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் கொண்டுள்ள இளநீர் குடிப்பதால் கிட்னியில் நச்சுக்கள் நீங்கி, செயல்பாடும் சிறக்கிறது.

நச்சுக்களையும் தொற்றுக்களையும், நீக்கி ஜீரண மண்டல உறுப்புகளுக்கு இதமான சூழலை உருவாக்கித் தர வல்லது ஆலுவேரா ஜூஸ். சர்க்கரை சேர்க்காமல் சுத்தமாக தயாரித்து குடிப்பது அவசியம்.

கெமோமில் (chamomile) என்ற மூலிகை செடியின் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் டீ நச்சுக்களை வெளியேற்றி வீக்கத்தைக் குறைக்கக் கூடியது. இந்த டீயை மாலை வேளைகளில் அருந்துவது நலம்.

மேற்கூறிய முறையில் நச்சுக்களை வெளியேற்றி நல்ல உடல் நலம் பெற்று நோயின்றி வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com