
நிறைய பெண்களுக்கு கன்னம் பகுதி மட்டும் சற்று ஒடுங்கிப் போனதுப்போல இருக்கும். அப்படிப்பட்ட பிரச்னைகளைப் போக்கி கன்னம் 'பன்' போன்று நன்றாக உப்புவதற்கு சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. பப்பிள்கம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ அவ்வப்போது பப்பிள்கம் வாங்கி நன்றாக மென்று ஊதுவதன் மூலமாக கன்னத்தின் தசையைச் விரியச் செய்து உப்பியது போல அழகாகத் தோற்றமளிக்கும்.
2. வாரத்திற்கு இருமுறை பப்பாளி கூழுடன் சிறிது தேன் கலந்து கன்னத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவினால் கன்னம் பளபளப்பாக அழகாக காட்சித்தரும்.
3. ஆப்பிளை பேஸ்டாக ஆக்கி கன்னத்தில் தடவி 20 நிமிடம் உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரை வைத்து கழுவிவிட வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இதை செய்வதனால் நல்ல பலன் கிடைக்கும்.
4. பாதாம் நான்கு, முந்திரி இரண்டு பாலில் ஊற வைத்து அரைத்து அந்த பேஸ்டை முகம் முழுக்க தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.
5. உப்பில்லாத வெண்ணெய் இரண்டு தேக்கரண்டியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். எண்ணெய் பசை இருந்தால், கடலை மாவை சேர்த்து முகத்தை கழுவுங்கள்.
6. சமமான அளவு கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன் கன்னத்தில் தடவிவிட்டு படுப்பது மாசற்ற சருமத்தை பெற சிறந்த வழியாகும்.
7. தண்ணீர் நிறைய குடிப்பது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் கேரட், ஆப்பிள், பிரக்கோலி, ஸ்ட்ராப்பெர்ரி போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்வது உடல் எடையைக் கூட்டாமல் கன்னம் மட்டும் பன்னுப்போல ஆவதற்கு உதவும்.
8. பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி விட சருமம் பளபளப்பாக தெரியும். பாலுக்கு பதில் தயிர், மோர் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
9. தினமும் முகத்தை மசாஜ் செய்து விடுவதன் மூலமாக ‘பன்’ போன்ற கன்னத்தை பெற முடியும். கன்னத்தை நன்றாக மசாஜ் செய்து விடுவதால், ரத்த ஓட்டம் அதிகரித்து கன்னம் நன்றாக அழகாக தெரியும்.
உங்களுடைய கன்னமும் அழகாக இந்த டிப்ஸை ட்ரை பண்ணிப் பாருங்களேன்.