Waxing செய்யும் முன் அறிய வேண்டிய 9 விஷயங்கள்.. இது தெரியாம வேக்சிங் செய்யாதீங்க!

Waxing Tips
Waxing Tips
Published on

Waxing என்பது மிகவும் பிரபலமான முடி அகற்றும் முறையாகும். இது நீண்ட காலம் முடி வளர்ச்சியைத் தடுத்து மென்மையான சருமத்திற்கு வழிவகுக்கிறது. நீங்கள் முதன்முறை வாக்சிங் செய்பவராக இருந்தாலும் சரி அல்லது அதற்கு முன் அனுபவம் இருப்பவராக இருந்தாலும் சரி வேக்சிங் செய்வது பற்றிய சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 

இதையும் படியுங்கள்:
கோவிட்டை விட 100 மடங்கு ஆபத்தானது பறவைக் காய்ச்சல் H5N1 - நிபுணர்கள் எச்சரிக்கை!
Waxing Tips
  1. வேக்சிங் செய்வதற்கு முன் முதலில் போதிய அளவு முடியின் நீளம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் மெழுகு முடியை சரியாகப் பற்றிக்கொண்டு முழுமையாக நீங்கும். எனவே வாக்சிங் செய்வதற்கு முன் முடி சிறியதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

  2. வேக்சிங் செய்வதற்கு இரு தினங்களுக்கு முன் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குங்கள். ஏனெனில் வேக்சிங் செய்யும்போது முடியுடன் சேர்த்து தோளின் இறந்த செல்களும் வெளிவரும் என்பதால், சில நேரங்களில் அது எரிச்சலுக்கு வழிவகுக்கும். 

  3. உங்களுடைய சருமம் அதிக சென்ஸிட்டிவ் கொண்ட சருமமாக இருந்தால் வேக்சிங் செய்வதற்கு முன் யோசிக்கவும். ஏனெனில் வேக்சிங் செயல்முறை சற்று கடினமானது என்பதால், உங்கள் தோலில் வீக்கங்களை ஏற்படுத்தலாம்.

  4. வேக்சிங் செய்த அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகமாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அச்சமயங்களில் தோல் மென்மையாக இருக்கும் என்பதால், சூரிய ஒளி சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

  5. வேக்சிங் செய்வதற்கு அனுபவம் உள்ள நிபுணர்களை நாடுங்கள். குறிப்பாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் சலூன் அல்லது ஸ்பா போன்றவை சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். 

  6. வேக்சிங் செயல்முறையானது வலி ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். உங்களால் வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்றால் மட்டும் இதை செய்து கொள்ளவும். அல்லது வேக்சிங் செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வலி நிவாரணி மாத்திரைகள் ஏதாவது போட்டுக் கொள்ளலாம். 

  7. வேக்சிங் செய்த பிறகு உங்கள் சருமத்தை முறையாகப் பராமரிப்பது அவசியம். குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு சூடான தண்ணீரில் குளிப்பது, நீராவிக் குளியல், கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும். 

  8. நீங்களாகவே வேக்சிங் செய்து கொள்வதற்கு பதிலாக தொழில்முறை நிபுணர்களை நாடுவது நல்லது. ஏனெனில் அவர்களால் மட்டுமே சரியான முறையைப் பின்பற்றி வேக்சிங் செய்ய முடியும். நீங்களாக செய்யும்போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

  9. ஒருமுறை வேக்சிங் செய்ததும், சிறிது கால இடைவெளிக்குப் பிறகுதான் மீண்டும் செய்ய வேண்டும். அடிக்கடி செய்வதால் முடியின் வேர்கள் பாதிக்கப்படலாம். மேலும் உங்கள் சருமத்திற்கும் ஏதேனும் பாதிப்புகள் உண்டாகும் என்பதால், அடிக்கடி வேக்சிங் செய்வதைத் தவிர்க்கவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com