கோவிட்டை விட 100 மடங்கு ஆபத்தானது பறவைக் காய்ச்சல் H5N1 - நிபுணர்கள் எச்சரிக்கை!

Bird flu
Bird flu

மிச்சிகனில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை செய்பவருக்கும், அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஒரு முட்டை உற்பத்தியாளருக்கும் இந்த வாரம் பறவைக் காய்ச்சல் H5N1 ஏற்பட்ட நிலையில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து நிபுணர்கள் இது கோவிட்டை விட மிகவும் வேகமாகப் பரவக்கூடிய காய்ச்சல் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த H5N1 வைரஸ் முதன்முதலில் 1996ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 18 மனிதர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் 6 பேருக்கு பறவைகளிலிருந்து நேரடியாக அவர்களுக்குப் பரவியதால் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பறவைகளுக்குள்ளும் பாலூட்டிகளுக்கும் பரவும்போது அவ்வளவாகப் பாதிப்பு ஏற்படாது. ஆனால் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு நேரடியாகப் பரவும்போது கடுமையானப் பாதிப்பாகவே இருக்கும். சமீபத்தில் நடந்த மாநாட்டில் பறவைக் காய்ச்சல் பற்றி விவாதம் செய்யப்பட்டது.

இதில் பிட்ஸ்பர்க்கில் உள்ள ஒரு பிரபல பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டாக்டர் சுரேஷ் குச்சிபுடி இதுகுறித்து பேசினார். அதாவது H5N1 தொற்று மனிதர்களை மட்டுமல்ல பாலூட்டிகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறினார். மேலும் “இப்போதே பாலூட்டிகள் மத்தியில் பெரியளவில் பரவியிருக்கிறது. ஆகையால் நாங்கள் அனைத்திற்கும் தயாராகிவிட்டோம்” என்று பேசினார். இங்கிலாந்தின் டேப்லாய்டு டெய்லி மெயிலின் அறிக்கையின்படி இந்த வைரஸ் உலகளவில் பாதிப்பை உண்டாக்கும் சக்திக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இது நிறைய பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பாதித்த நபர்களில் முக்கால் வாசி பேர் உயிரிழக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

இதுவரை பறவைக் காய்ச்சல் பரவி பாதிப்படைந்தவர்கள் மற்றும் உயிர்சேதம் பற்றிய விவரங்களை உலக சுகாதாரத்துறை அமைப்பு வெளியிட்டுள்ளது. 2003ம் முதல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒவ்வொரு நூறு பேரில் 52 பேர் இந்த பறவைக் காய்ச்சலுக்குப் பலியாகிவுள்ளனர். அதேபோல் பாதிப்படைந்த 887ல் 462 பேர் பலியாகினர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் உயிரிழப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சரிந்தது சாம்ராஜ்யம்... கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட Byju's நிறுவனர்!
Bird flu

தற்போது வரை இடாஹோ, கன்சாஸ், மிச்சிகன், நியூ மெக்ஸிகோ ஆகிய இடங்களில் பறவைக் காய்ச்சல் அதிகம் பரவியிருக்கிறது. அமெரிக்கா மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று கூறினாலும் கூட பண்ணையில் பணியாற்றும் நபர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது.

நிபுணர்கள் இந்தக் காய்ச்சல் கோவிட்டை விட உலகளவில் 100 மடங்கு மேகமாகப் பரவும் தன்மையுடையது என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com