இளம்பெண்களுக்கு 9 வகையான லேட்டஸ்ட் டாப்ஸ் வகைகள்!

latest tops...
latest tops...Image credit - pixabay.com

இளம் பெண்கள் ஜீன்ஸ், லெகின்ஸ், பட்டியலா, பலாசு போன்ற பேண்ட் வகைகள் அணிவார்கள். அதற்கு ஏற்றார் போல விதவிதமான டாப்புகளை அணிந்து கொள்ள விரும்புவார்கள். இந்த பதிவில் இளம் பெண்களுக்கான லேட்டஸ்ட் டாப் வகைகள் சிலவற்றை  பற்றி பார்க்கலாம்.

1. கிராப்டாப்:

ட்ரெண்டிங்கில் உள்ள டாப் வகை இது. இதில்  ஸ்லீவ்லெஸ், ஷார்ட் ஸ்லீவ், லாங் ஸ்லீவ் டாப் வருகின்றன. ஜீன்ஸ் மற்றும் ஸ்கர்ட் உடன் அணிவதற்கு மேட்ச் ஆக இருக்கும். 

2. டேங்க் டாப்:

நவீன மல்டி டாஸ்கிங் செய்யும் பெண்களுக்கு ஏற்றது. இந்த டாப்புகளை அணிந்து கொண்டு ஒர்க் அவுட் செய்யலாம். வீட்டுக்குள் அணிந்து கொள்ளலாம். வெளியில் செல்லும்போதும் அணிவதற்கு ஏற்றது. இது பலவித  கழுத்து மாடல்களில் வருகிறது. வீக் கழுத்து, படகு கழுத்து, சதுர கழுத்து என்ற  பல விதங்களில் கிடைக்கின்றன.

3. டியூனிக் டாப்:

குளிர்காலத்திற்கு ஏற்றது. அணிந்து கொள்ளும்போது நல்ல வெப்பமான உணர்வைத்தரும்.  நேர்த்தியான கூடுதல் அடுக்குக் கொண்ட டாப் இது. தொப்பி ஸ்லீவ்கள் ஸ்வெட்டர் ஸ்லீவுகள் த்ரீ போர்த் ஸ்லீவுகள் போன்ற ஸ்லீவ் வகைகளில் கிடைக்கும். இது ஒரு நீளமான சட்டையாகும். இடுப்புக்கு கீழும் நீண்டிருக்கும். அழகான இலகுரகத் துணியில் இது கிடைக்கும். இதை அணிந்து கொள்ளும் போது ஒரு ராயல் லுக் கிடைக்கும்

4. நெக் டி-ஷர்ட்:

இந்த நெக் டி-ஷர்ட்டுகள் கூடுதல் கவரேஜ்களை வழங்குகின்றன. கடினமான உடற்பயிற்சியின்போது  இதை அணிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும்போதும் அணிந்து கொள்ளலாம். இது  ஜீன்ஸ் அல்லது கார்டியன் எனப்படும் கவுன் டைப் உடைகளுடன் அணிந்து கொள்ளலாம். வி கழுத்து வைத்த இந்த சட்டையுடன் மேலே பிளேசர் அணிந்து கொள்ளலாம்.

5. பேட் விங் டாப்ஸ் (Bat wing tops);

வவ்வால்களின் சிறகுகளை ஒத்த ஸ்லீவ்கள் இருப்பதால் இதற்கு பேட்விங் டாப்ஸ் என்று பெயர். இதன் மேல் பகுதி கீழ் பகுதியை விட தளர்வாக இருக்கும். கீழ்பகுதி மடிந்த வடிவமைப்பில் இருக்கும். இதற்கு மேட்ச் ஆக ஜீன்ஸ் அல்லது கேப்ரிஸ் அணிந்தால் அழகாக இருக்கும். டாப்ஸின் ஸ்லீவ் பகுதி முழு நீளம் அல்லது த்ரீ ஃபோர்த் ஸ்லீவ் ஆக இருக்கும்.

6. பட்டன் அப் பிளவுஸ்கள்;

சட்டை போன்ற தோற்றத்தில் இருக்கும்.  இது நூற்றுக்கணக்கான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கிறது. இதில் காலர் இருக்கும். மற்ற டாப்ஸ்களை விட இந்த  டாப்ஸ்களை எந்தவிதமான சந்தர்ப்பத்திலும் அணிந்து கொள்ளலாம். எல்லா வயதுப் பெண்களுக்கும் ஏற்ற மாதிரி கிடைக்கின்றன. மால், பார்க்குக்கு சென்றாலும் அல்லது அலுவலகத்திற்கு சென்றாலும்  இதை அணிந்து கொள்ளலாம்.

7. வளைந்த ஜீன்ஸ் ஸ்டாப்

இந்த வகையான டாப்ஸ் இடுப்பை இறுக்கிப் பிடித்திருப்பது போன்று இருக்கும். நாகரீகமான தோற்றத்தை தரும். இது ஜீன்ஸ் அல்லது ஷார்ட்சுக்கு மேட்ச்சாக அணிந்து கொள்ளலாம். இது ட்ரெண்டியான லுக்கை தரும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு திறமையோடு பொறுமையும் அவசியம்!
latest tops...

8. டிசைனர் பேக் பேட்டன் டாப்ஸ்

இந்த வகையான டாப்ஸ் இளம் பெண்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த டாப்ஸின் பின்புறத்தில் டிசைன்கள், ஜிப்புகள், லேஸ் அல்லது பல பேட்டர்ன் களுடன் அமைந்திருக்கும். இது இரவு நேர பாட்ர்ட்டி களுக்கு ஏற்றது. இதன் முன்புறமும் பின்புறமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும்

9. ஸ்கூப் நெக் டாப்ஸ்;

இதுவும் இளம்பெண்களுக்கு நவநாகரீகத் தோற்றத்தை தரும். பெரும்பாலும் பாலியஸ்டர் அல்லது பாலியஸ்டர் மிக்சிங் உடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதனுடைய கழுத்துப்பகுதி இறுக்கமாக இல்லாமல் இருப்பது அணிவதற்கு வசதியாக இருக்கும். இவை நிறைய வண்ணங்களிலும் வடிவங்களிலும் கிடைக்கின்றன. ஜீன்ஸ் உடன் அணிவதற்கு ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com