வெற்றிக்கு திறமையோடு பொறுமையும் அவசியம்!

motivation image
motivation imageImage credit =- pixabay.com
Published on

ன்றைய இளைஞர்களிடம் திறமை நிறைய இருக்கிறது. இல்லாத மை பொறுமை. காத்திருப்பது என்பதும் ஒரு கலைதான். ஆறுமாதம் விளையும் அரிசியை மூன்று மாதத்தில் விளைய வைத்தது விஞ்ஞானம்.

ஆறு வருஷத்தில் காய்க்கும் தென்னையை  மூன்று வருடத்தில் காய்க்க வைத்தது  விஞ்ஞானம் விவசாயம். இந்த அவசரகால உணவை உண்ணும் இளைய தலைமுறைக்கு பரபரப்பு அவசரம் பதற்றம் ஆத்திரம் அதிகம் இருக்கிறது. கொழுத்த மீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு என்ற திருக்குறள் இளைய தலைமுறைக்கு அவசியம் புரியவேண்டும். எல்லாவற்றுக்கும் அவசரப்பட்டால் முதுமையும் முந்தி வரும். அவசரப்படாமல் நிதானமாக இருந்தால் ஆபத்துகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். நிதானமாக பிரச்னைகளைக் கையாண்டால்  பல புதிய பிரச்னைகள் தவிர்க்கப்படும்.

இது பழைய தலைமுறையிடமிருந்து புதிய தலைமுறை கற்க வேண்டிய பாடம். இந்திய விடுதலைப் போராட்டம் உச்சக்கட்டமாக இருந்த காலம் அது. இந்திய விடுதலை வீரர்களை ஆங்கில அரசு வேவு பார்த்துக் கொண்டிருந்தது. பாலகங்காதர திலகர்  அப்போது விடுதலைப் போரில் பெருந்தளபதி. ஆறு மாதமாக அவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த சமையல்காரர் தாம் வேலையில் இருந்து நிற்க விரும்புவதாக அறிவித்தார். திலகர் ஏன் என்று கேட்க "நீங்கள் தரும் சம்பளமான ஆறு ரூபாய் போதவில்லை" என்றார். உடனே திலகர்,"அதுசரி.சமயலுக்கு நான் தருவது 6 ரூபாய்,ஆனால் என் நடவடிக்கைகளை வேவு பார்க்க உனக்கு பிரிட்டிஷ் சர்க்கார் தரும் சம்பளம் 24 ரூபாய். ஆக முப்பது ரூபாய் சம்பாதிக்கிறாய். அப்படியிருந்தும் போதவில்லயா" என்று கூறி இடி இடியென்று திலகர் சிரித்தார். உண்மையில் அந்த சமையல்காரன் பிரிட்டிஷ்  அரசு அனுப்பிய ஒற்றன் என்பது அவருக்குத் தெரியும் என்பதால் திலகர் ஜாக்கிரதையாக இருந்தார். இந்த நிதானம் பழைய தலமுறையின் பாராட்டத்தக்க பண்பு.

அதற்காக அளவுக்கு மீறிய பொறுமையும் இருக்கக் கூடாது. பஞ்சதந்திரகதை ஒன்று உண்டு. ஒரு குட்டிக்  குரங்கு படாத பாடுபட்டு தோட்டம் போட்டது.

இதையும் படியுங்கள்:
கை, கால் நகப்பராமரிப்பு டிப்ஸ்!
motivation image

பூக்கள் பூத்து கனியாகி அவற்றைத் தின்னலாம் என்று கணக்கு போட்டது. என்ன கொடுமை எதுவுமே முளைக்கவில்லை. சீனியர் குரங்கிடம் முறையிட்டது. நீ விதைபோட்டு தண்ணீர் விட்டாயா என்று கேட்டதும். அது எட்டு பக்கெட் காலையும் எட்டு பக்கெட் மாலையும் ஊற்றுவேன் என்றது குட்டிக் குரங்கு. அடடா எட்டு பக்கெட் தண்ணி விட்டா அழுகிப் போயிருக்கும் என்றது சீனியர் குரங்கு. குட்டியோ ஒரு விதை கூட அழுகலை என்று உறுதியாக கூறியது. அதெப்படித்தெரியும் என்றதற்கு நான்தான் விதை முளைச்சிடுச்சான்னு தினம் தினம் பார்ப்பேனே  என்றது குட்டிக்குரங்கு. குட்டிக் குரங்கு போல் பொறுமை இல்லாமல்  நமக்கென்று ஒரு காலம் வரும்வரை காத்திருக்க பொறுமை தேவை.

திறமையோடு கூட பொறுமையும் இருந்தால்  இளைய தலைமுறைக்கு வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com