இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்கிறீங்களா? போச்சு!

Oiling Hair
Advantages and Disadvantages of Oiling Hair at Night

நூற்றாண்டு காலமாகவே இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதென்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. ஆனால் தற்போது இந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இருப்பினும் இரவில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடிவளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு மற்றும் முடி உதிதலைத் தடுக்கவும் உதவும் என கருதப்படுகிறது. இந்தப் பதிவில் இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

நன்மைகள்: 

  • இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது தலைமுடியின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இது வறட்சி மற்றும் முடி உடைவைத் தடுக்க உதவும். 

  • தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லி எண்ணெய் போன்ற சில எண்ணெய்கள் தலைமுடியின் வேர்களை ஊட்டமளித்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது. 

  • எண்ணெய் தேய்ப்பது தலைமுடியின் ஈரப்பதத்தை அதிகரிப்பதால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். 

  • இரவில் எண்ணெய் தேய்ப்பது தலைமுடியின் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்தலைக் குறைக்க உதவும். 

  • இரவு தூங்குவதற்கு முன் எண்ணெய் தேய்த்துக்கொண்டு படுத்தால் அது தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும். 

தீமைகள்: 

  • இரவில் தலையில் எண்ணெய் தேய்ப்பதால், அது முடியில் நன்றாக பிடித்துக் கொண்டு கழுவுவதைக் கடினமாக்கும். 

  • அதிகப்படியான எண்ணெய் தேய்ப்பது தலைமுடியின் துளைகளை அடைத்து முடி வளர்ச்சியைத் தடுக்கலாம்.

  • இரவில் ஈரமான தலைமுடியில் எண்ணெய் தேய்ப்பது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
உருட்டி விட்டான் பாறை, தோல் உரிச்சான் மேடு, தொங்க விட்டான் குகை இதெல்லாம் உள்ள கோட்டை எங்குள்ளது தெரியுமா?
Oiling Hair
  • சிலருக்கு இரவில் எண்ணெய் தடவுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தோல் எரிச்சல் மற்றும் சிவந்து போதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். 

  • மேலும் இரவில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது அது தலையணையில் படிந்து படுக்கையை மோசமாக்கும் வாய்ப்புள்ளது. 

எனவே இந்த விஷயங்கள் அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் இரவில் எண்ணெய் தேய்க்கலாமா, வேண்டாமா? என முடிவெடுத்துக் கொள்ளுங்கள். இரவில் தலை முடிக்கு எண்ணெய் தேய்ப்பது நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு பாரம்பரிய முறையாகும். இருப்பினும் அதை சரியான முறையில் செய்ய வேண்டும். அதிகப்படியாக எண்ணெய் தேய்ப்பதை தவிர்த்து, உங்களது தலைமுடி வகை மற்றும் அதன் தேவைக்கு ஏற்ப எண்ணெய் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com