குறைந்த செலவில் கோடைக்கால சருமத்தை கண்ணாடி போல காக்கும் வழிகள்!

ஸ்கின் சைக்கிளிங், ரைஸ் வாட்டர், நியாசினமைட், பேரியர் ரிப்பேர் கிரீம், சர்கேடியன் ஸ்கின் கேர் போன்ற விஞ்ஞானபூர்வ முறைகளை ரூ.300 முதல் ரூ.2000 வரை உள்ள பொருட்களால் பின்பற்றி கோடைக்காலத்திலும் முகம் பளபளப்பை காக்கும் டிப்ஸ்.
skin-care-home-remedies
skin-care-home-remedies
Updated on

கோடை வெயில் சூடு, தொடர்ந்து மொபைலில் மூழ்கிய   கண்கள், சுற்றுப்புற மாசு மற்றும் லேசான மன அழுத்தம்... இத்தனை போதாதா உங்கள் முகம் களையிழக்கவும் சருமம் டல்லடிக்கவும்? கவலையைவிடுங்க. எளிய முறையில், விஞ்ஞானபூர்வமாய் நேர்மறை விளைவுகள் பெற உதவும் ஐந்து ஆலோசனைகள் இதோ...

சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை பிரித்தெடுக்க கரடு முரடான பிரஷ்களைப் பயன்படுத்தும் பழைய முறையைத் தவிர்த்து, நவீன முறையில் அமிலத்தைக் கொண்டு அவற்றை சுலபமாக கரைத்தெடுத்து விடலாம். AHA (Glycolic or lactic)ஆசிட் மற்றும் BHAs (salicylic) போன்ற, சுறு சுறுப்புடன் செயலாற்றக் கூடிய, இரசாயன எக்ஸ்ஃபோலியண்ட்களை, "Skin cycling" முறையில், நீர்ச்சத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி, இரவு நேரங்களில் பயன்படுத்தலாம்.

இது சருமத்தின் மேற்பரப்பு தோலில் எந்த வித எரிச்சலையும் உண்டு பண்ணாது. தரமான AHA/BHA சீரம் அல்லது டோனர் (Toner) Rs.400/- - Rs.900/-ல் கிடைக்கலாம்.

சரும அழகைப் பராமரிக்க ஜப்பானியர்கள் பயன்படுத்தும் ரைஸ் வாட்டர் அல்லது ட்ரானெக்சாமிக் (Tranexamic) ஆசிட்டுடன், வைட்டமின் C சீரம் சேர்த்து உபயோகிப்பது ஸ்கின் டோனை சம நிலைப்படுத்தவும், கரும் புள்ளிகள் நீங்கி சருமம்  புதுப்பொலிவு பெறவும்  உதவி புரியும். Rs. 500-1500 க்குள் நம்பகமான சருமப் 

பள பளப்பு பெற வைட்டமின் C சீரம் பயன்படுத்தலாம். சருமதிற்குள் இருக்கும் கொலாஜனை பாதிப்புக் குள்ளாக்கி சருமத்தை டல்லடிக்கச் செய்யும் சுற்றுப்புற மாசு மற்றும் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுகளை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது வைட்டமின் C. இதனால் உடலுக்குள் ஃபிரீ ரேடிக்கல்களின் அளவை சமநிலைப்படுத்தி வைக்க முடியும்.

சருமப் பாதுகாப்பாளனாகிய ஸ்கின் பேரியர் (skin barrier) நீரேற்றம் குறைந்து இறுக்கமாகிப் போவதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அதற்கு செராமைட், ஹையாலுரோனிக் ஆசிட் மற்றும் நியாசினமைட் போன்ற 'சீல் இன் மாய்ஸ்ச்சர்' களை தாராளமாக சருமத்தின் மீது தடவிவையுங்கள். இவை தோலிலுள்ள 

இயற்கையான நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சருமம் பள பளப்புப் பெறவும் உதவிபுரியும். மேலும், Rs.350-1200 க்குள் கிடைக்கும் சிறந்த பேரியர் ரிப்பேர் கிரீம் மற்றும் நீரேற்றம் தரும் டோனர்களையும் பயன்படுத்தலாம்.

கார்ட்டிசால் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் இரத்த ஓட்டத்தை பாதிப்படையச் செய்யும்போது, இரவில் சரியான தூக்கம் பெற முடியாது. அதன் காரணமாக காலையில் முகம் டல்லாகவும் சோர்வுற்றும் காணப்படும். நாம் இரவில் தூங்கும்போதுதான் செல் பராமரிப்பு மற்றும் திசுக்கள் ரிப்பேர் போன்ற வேலைகளை நம் உடல் மேற்கொள்கிறது. 

இதையும் படியுங்கள்:
5 வகை நியாசினமைட் ஃபேஸ் சீரம்ஸ் மூலம் முகம் கண்ணாடி போல பளபளக்கும் ரகசியங்கள்!
skin-care-home-remedies

நம் உடலின் இயற்கை நேர (circadian clock) அட்டவணையுடன் சர்கேடியன் ஸ்கின் கேர் பராமரிப்பு முறையையும் ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்திக் கொள்வது, சருமப் பராமரிப்பு சீராக நடைபெற்று சருமம் பள பளப்புப் பெற உதவியாகும். எனவே படுக்கைக்கு செல்லும் முன் தரமான, செல்களை புதுப்பிக்க உதவும்  கிரீமை தாராளமாக முகத்தில் பூசி தூங்க செல்லுங்கள். இதனால் செல்கள் மீளுருவாக்கம் பெறுவதுடன் ஆழ்ந்த தூக்கமும் பெறலாம். சாதாரணமாக நைட் கிரீம் Rs. 600/-லிருந்து Rs. 2000/- க்குள் கிடைக்கும்.

வெளியில் செல்லும்போது சூரிய ஒளியின் தாக்கத்தால் நம் சருமத்தில் கருந்திட்டுக்கள் தோன்றாமலிருக்க, தினமும் காலையில் விரிவான செயல்பாடு கொண்ட (Broad-spectrum) SPF-30 + பயன் படுத்துவது சிறந்த பலன் தரும். தரமான, கிறீஸ் போலல்லாத (Non greasy) சன் ஸ்கிரீன் மார்க்கெட்களில் Rs. 300/- லிருந்து Rs. 850/- க்குள் கிடைக்கும்.

மேற்கூறிய வழி முறைகளை தொடர்ந்து பின்பற்றி வரும்போது கோடை காலத்திலும் உங்கள் முகம் ஜொலிப்பு குறையாமல் மின்னும் என்பதில் சந்தேகம் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com