5 வகை நியாசினமைட் ஃபேஸ் சீரம்ஸ் மூலம் முகம் கண்ணாடி போல பளபளக்கும் ரகசியங்கள்!

கோடை வெயிலால் சிவந்து எரிச்சலடையும் சருமத்தை அமைதிப்படுத்தி, நீரேற்றம் நிரப்பி, கரும்புள்ளி–கருந்திட்டுகளை குறைத்து கண்ணாடி போல பளபளக்கும் முகத்தைக் கொடுக்கும் 5 நியாசினமைட் சீரம்களின் பயன்கள்!
niacinamide-face-serums
niacinamide-face-serums
Updated on

கோடை வெயிலில் வெளியே சென்று வரும்போது முகத்து பகுதி சருமம் சிவந்து போவதும், மென்மையுறுவதும், வெயிலின் தாக்கத்தால் எரிச்சலடைவதும் சகஜமாக நடக்கக் கூடிய நிகழ்வுகள்.

இம்மாதிரியான கோளாறுகளை நிவர்த்தி செய்து, சருமத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்து ஆரோக்கியமுடன் வைக்க உதவி புரியும் ஐந்து வகை  நியாசினமைட் சீரம்ஸ் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

பன்முகத்தன்மையுடன் செயலாற்றக் கூடிய இந்த சாதாரண, சருமத்தை அமைதிப்படுத்தவும், சரும மேற்பரப்பின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரித்தப் பாதுகாக்கவும்  உதவும் (Soothing and skin Barrier Support) நியாசினமைட் சீரம் உபயோகித்து பல வகை நன்மைகளை அடையலாம்.

வைட்டமின் B12, செராமைட் காம்ப்ளெக்ஸ், 2% நியாசினமைட், பிஸாபோலால் மற்றும் சென்டெல்லா ஆசியாட்டிகா உள்ளிட்ட எட்டு வகையான தாவர வழித் தொழில் நுட்பங்களை (phytotechnologies) பின்பற்றி இந்த சீரம் தயாரிக்கப்படுகிறது. இதை சருமத்தில் உபயோகிக்கும்போது உடனடியாக அசௌகரிய உணர்வுகள் நீங்கி சிவப்பு நிற பேட்ச்களும் மறைந்துவிடும். முகத்தில் நீர்சத்து 86% அதிகரிக்கும்.

மினிமலிஸ்ட் நியாசினமைட் 5% ஃபேஸ் சீரம்: 10% நியாசினமைட் சீரம் முகத்தில் ஹெவியாக உணரப்பட்டால், மிருதுவாக உள்ள 5% நியாசினமைட் சீரத்தின் உதவியை நாடலாம். இதிலுள்ள பிஃபிடா 

ஃபெர்மென்ட் லைசேட் (Bifida Ferment Lysate) என்னும் கூட்டுப் பொருள், அல்ட்ரா வயலட் சூரியக் கதிர்களினால் சருமத்தில் உண்டான செல் சிதைவுகளை சரிப்படுத்தவும் செல்களை மேலும் சிதைவுறாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. ஓட்ஸ் சாறு  (Oats extract) சருமத்தில் உள்ள வீக்கங்களைக் குறைத்து, ஸ்கின் பேரியரின் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்க உதவி செய்கிறது. ஹையாலுரோனிக் (Hyaluronic) ஆசிட் உலர்ந்த சருமத்திற்கு நீரேற்றமளித்து நாள் முழுவதும் சருமம் உப்பலுடனும் மிருதுத்தன்மையுடனும் தோற்றமளிக்க உதவி புரிகிறது.

கோஜிக் (Kojic) ஆசிட் மற்றும் கொரியன் ரைஸ் வாட்டர் சேர்ந்த பில்கிரிம் (Pilgrim) 10% நியாசினமைட் ஃபேஸ் சீரம்: இந்த வகை சீரம் மூன்று வெவ்வேறு வழிகளில் செயலாற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
முகத்தில் கருந்திட்டுகளா? வைட்டமின் C சீரம் செய்யும் மாயாஜாலங்கள்!
niacinamide-face-serums

10% நியாசினமைட் பருக்கள் தோன்றி மறைந்த இடங்களில் உள்ள தழும்புகளை நீக்கவும் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய்ப் பசையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கோஜிக் ஆசிட் மற்றும் சிங்க் PCA சருமத்தின் மீதுள்ள கரும் புள்ளிகளை நீக்கி தோல் பள பளப்பு பெற உதவுகிறது.

இன்சைட்ஸ் (Insights) காஸ்மெடிக்ஸ் 10% நியாசினமைட் வைட்டமின் C ஃபேஸ் சீரம்: கடினமான கோடை வெப்பத்தை கடந்து வந்த பின் முகத்தில் காணப்படும் பருக்கள், கரும் புள்ளிகள், கருந்திட்டுக்கள், செல்களில் சிதைவு ஆகிய அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வைக் கொண்டு வர உதவுகிறது இந்த மென்மைத் தன்மை கொண்ட சீரம். வைட்டமின் C மற்றும் இயற்கை சாறுகள், 10% நியாசினமைட்டுடன் இணைந்து செயலாற்றி தோலின் நிறத்தை மேன்மை பெற செய்யவும், கரும் புள்ளிகள் நீங்கவும், சருமம் உலர்ந்து போவதை தடுத்து நீரேற்றத்துடன் வைத்துப் பாதுகாக்கவும் பெருமளவில் உதவிபுரிகின்றன.

ஜூஸி கெமிஸ்ட்ரி 10% நியாசினமைட் மற்றும் 2% எக்டோயின் (Ectoin) ஃபேஸ் சீரம்: இது மற்ற வகை சீரம்களிலிருந்து தனித்துவம் பெற்று விளங்க எக்டோயின் எனப்படும் ஓர் இயற்கைச் சேர்மமே காரணம் ஆகும். அமினோ ஆசிட்களின் வழித் தோன்றலான எக்டோயின், செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவும் ஒரு மூலக்கூறு.

சரும செல்கள் ஒரு நிலையான பாதுகாப்பு பெறுவதற்கு, செல்களை சுற்றிலும் நீரேற்றம் நிறைந்த  ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்து,  சூரியனிலிருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சு, சுற்றுச்சூழல் மாசு மற்றும் ப்ளூ லைட் போன்ற தீய சக்திகளின் தாக்கத்திலிருந்து செல்களை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது இது. கூடவே, 10% நியாசினமைட் மெலனின் என்ற நிறமி அளவுக்கு அதிகமாக சருமத்தின் மேற்பரப்பிற்கு கடத்தப்படுவதை தடுக்கவும், சருமத்திற்கு அடியில் சுரக்கும் செபம் (sebum) எனப்படும் சரும மெழுகின் அளவை சமநிலைப்படுத்தி வைக்கவும் உதவிபுரிகிறது.

இதையும் படியுங்கள்:
முகம் கண்ணாடி மாதிரி பளபளக்க நியாசினமைடு செய்யும் அற்புதங்கள்... இனிமேல் இதை மிஸ் பண்ணாதீங்க!
niacinamide-face-serums

இந்த வகை சீரம், ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்போது போல, மேற்புறத்தோலை ரிப்பேர் செய்து பாதுகாக்கவும், எண்ணெய்ப் பசையின் அளவை சம நிலைப்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுக்களிலிருந்து காக்கவும் உதவுகிறது. 

நியாசினமைட் சீரம்ஸ் சென்சிடிவ், ஆய்லி, பருக்கள் நிறைந்தது போன்ற எல்லா வகை சருமத்திலும் பயன்படுத்தி பலனடைவதற்கு ஏற்ற சீரம்.

logo
Kalki Online
kalkionline.com