பளபளப்புக்கு பாதாம் ரகசியம்: பல வழிகளில் முகம் மினுமினுக்க இயற்கை டிப்ஸ்!

தினமும் பாதாம் சாப்பிடுதல் முதல் பாதாம் எண்ணெய் மசாஜ், பாதாம்-பால்-தேன்-பப்பாளி பேக்குகள் வரை, திருமணத்துக்கு முன் முகம் மினுமினுக்க உதவும் எளிய அழகு டிப்ஸ்.
almond-secrets
almond-secrets
Updated on

பாதாம் என்று நினைத்தாலே நம் மனதளவில் அதன் சத்தும் சுவையும் எட்டி பார்க்கும். பாதாம் கொஞ்சம் காஸ்ட்லிதான்.

ஆனால் சருமத்தில் இளமையை தக்கவைக்கும் தன்மை இதற்கு உண்டு. இயற்கை அள்ளித்தரும் அழகு கொடைகளில் ஒன்றே பாதாம் இது எவ்வாறு நம் அழகை மேம்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

முகத்தில் புன்னகை

பெண்களின் முகத்தில் தவழும் புன்னகையே அவர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக பார்ப்பவர் கண்களை கவரும்.  பெண்கள் முழுமையான புன்னகையை வெளிப்படுத்த முடியும். இவர்கள் ஃபிரெஷ்ஷான புன்னகையை பாதாம் சாப்பிட அள்ளித்தரும்.

முகச் சுருக்கம் நீங்க

பாதாமில் பாஸ்பரஸ், தாது உப்புகள் குளுட்டமிக் அமிலம் ஆகியவை   நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் பி17 சத்து ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது.

தினமும் ஐந்து பாதாம் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நல்ல கொழுப்பானது சருமத்தில் சுருக்கம் விழுவதை தடுக்கிறது.

கண்களுக்கு புத்துணர்ச்சி தர

பெண்கள் கணினி, மொபைல் டிவி பார்ப்பதால் கண்கள் சோர்வடைவதும், கண்களை சுற்றி கருவளையமும் உண்டாகிறது.

இதற்கு இரவு படுக்கச் செல்லும் முன் முகத்துக்கும், கண்களை சுற்றியும் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன்  புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

கருவளையம் மறைய

கண்களில் கருவளையம் உள்ள பகுதிகளில் பாதாம் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் கருந்திட்டுகள் கருவளையம் உள்ள பகுதிகளில் பேக்காக போட்டு அரைமணி நேரம் உலரவிட்டு, குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் உள்ளவர்கள் தினமும் இந்த பேக் பயன்படுத்தினால் விரைவில் கருவளையம் மறைந்து கண்கள் பளிச்சிடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் காஸ்ட் அயர்ன் பாத்திரம் கறுத்துப் போய்விட்டதா... இதோ அதைச் சரிசெய்யும் எளிய வழிகள்!
almond-secrets

கருந்திட்டுகள் மறைய

பாதாமில் உள்ள வைட்டமின் ஈ ச்சத்து முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி பளிச்சிடும் தன்மையை அளிக்கிறது. அரைத்த ஓட்ஸ்  பால் சேர்த்து முகத்துக்கு பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்  கருத்திட்டுகள் மறையும். வாரம் ஒருமுறை இந்த பேக் போட்டுக்கொள்வதால் முகத்தில் உள்ள கருந்துட்டுகள் மறைந்து முகம் பளிச்சிடும்.

முகம் பளபளக்க

திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் மணநாளில் பளிச்சிட பாதாம் பருப்பு உதவும். திருமணத்துக்கு 15 நாட்கள் முன்பிருந்தே தினமும் இந்தபேக் உபயோகிக்க வேண்டும். ஐந்து பாதாம் பருப்புகளை ஊறவைத்து காய்ச்சாத பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து நைசாக அரைத்து இதனுடன் ரோஸ் வாட்டர் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்  சேர்த்து முகத்துக்கு பேக்காக போட்டு அரை மணி நேரம் உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்திற்கு பொலிவும் மினுமினுப்பும் கிடைக்கும்.

பாதாம் பொடியுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந் நீரில் கழுவினால் முகம் பிரகாசம் அடையும். இறந்த செல்களை வெளியேற்றும். இதனால் உண்டான கருமை படிப்படியாக மறையும்.

பாதாம் பொடியுடன், பப்பாளி கூழ் கலந்து முகத்தில் போட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல பலன் தரும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதனை கடைபிடிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com