
வெங்காய ஜுஸ்
வெங்காயத்தில் சல்பர், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், மற்றும் வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்றவைகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் வேர்க்காலை வலுவாக்கும். பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முடி மெலிவைத்தடுத்து முடி அடர்த்தியை தூண்டுகின்றன.
கீரை ஜுஸ்
காலே மற்றும் ஸ்பினாச் போன்ற கீரை வகைகளில் வைட்டமின்கள், மினரல்கள் இரும்புச் சத்து செலினியம் மாற்றும் சி சத்துக்கள் உள்ளதால் கொலாஜன் தூண்டப்பட்டு சத்துக்கள் நன்றாக உறிஞ்சப்பட்டு தலையில் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கின்றன. கீரைச்சாறோடு செலரி, வெள்ளரியையும் சேர்த்து உட்கொள்ள முடிவளர்ச்சி தூண்டப்பட்டு அடர்த்தியாக வளர உதவி செய்கிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஜுஸ்
இதில் பீடா கரோட்டின் நிறைந்துள்ளது. முடியை ஃப்ரீ ராடிகல்கள் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இந்த ஜுஸ் செல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்தும், சீபம் உருவாகுவதை. தடுத்தும், முடி உடைதலைத் தடுத்தும் முடியை நீரேற்றமாகவும் வைக்கும் இந்த ஜுசில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் முடி ஆரோக்கியமாக வளருவதை ஊக்குவிக்கிறது.
க்ரீன் டீ
இது முடியை ஃப்ரீராடிகல்களிடமிருந்து காப்பாற்றுகிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகமாகிறது. காடசின் மெடபாலிசத்தை அதிகரித்து வேகமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தினமும் ஒரு கப் க்ரீன் போதுமானது.
பீட்ரூட் ஜுஸ்
இதில் பெடாலெயின் என்ற ஊட்டச்சத்து உள்ளது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும் இதன் ஆக்சிஜன் முடியை வலுப்படுத்தும். மேலும் இரும்புச்சத்து ,ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, துத்தநாகம், பொடாசியம் போன்றவை நிறைந்துள்ளதால் அபார முடி வளர்ச்சி ஏற்படும்.
நெல்லிக்காய் ஜுஸ்
சூப்பர் டானிக்காக இது ஆன்டிஆக்சிடண்ட்ஸ் மற்றும் சி சித்து நிறைந்ததால் முடி வளர்ச்சி தூண்டபடும். இதன் ஃபைடோந்யூட்ரியன்ட் மற்றும் அமைனோஅமிலம் இரத்த ஓட்டத்தை சீராக்கி நரைப்பதைத் தடுக்கும். முடியை பளபளப்பாக்கும்
ஆலோவேரா ஜுஸ்
வைட்டமின் ஏ, சி, ஈ நிறைந்த இது, அழற்சியைக் குறைத்து வயிற்றை சுத்தமாக்கி நீரேற்றத்தை அதிகரிக்கும் வறண்ட முடியை தடுத்து மென்மையான ஆரோக்கிய முடிவளர்ச்சியைத் தூண்டும்.