
உங்க முடி வளராமல் சுருண்டு போய் கிடக்கிறது என்றால், இனி நீங்கள் ஷாம்பு போட்டு குளிக்கும் போது இந்த பொருட்களையும் சேர்த்து குளித்துப் பாருங்கள். எப்பேர்ப்பட்ட முடி கொட்டும் பிரச்சனையும் தீர்ந்து முடி நன்றாக வளரும். அந்த பொருட்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உங்களுக்கு தலையில் நிறைய பொடுகு தொல்லை இருந்தாலும், முடி வளராமல் இருந்தாலும் இதை செய்வதின் மூலம் எல்லா பிரச்சனைகளும் காணாமல் போய்விடும். முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீர் வீட்டுக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி கொழுந்து வேப்பிலை, இரண்டு கிராம்பு, 1 தேக்கரண்டி வெந்தயம், கருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு கொதிக்க வைக்கவும்.
இதில் இப்போது அரை கைப்பிடி அளவு அரிசியை சேர்க்கவும். இந்த தண்ணீரை 5 முதல் 7 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும். அப்போது தான் சத்துக்கள் தண்ணீரில் இறங்கி வரும்.
நன்றாக கொதிக்க வைத்த பிறகு இறக்கி தண்ணீரை ஆற விடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து செம்பருத்தி இலை 1 கைப்பிடி மற்றும் செம்பருத்தி பூ 1 கைப்பிடி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து விட்டு தண்ணீரை வடிகட்டியது போக மீந்த பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரை இதில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து அதில் ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளுங்கள். இப்போது செய்து வைத்திருக்கும் பேஸ்ட்டை தலையில் அப்ளை செய்துக்கொள்ள வேண்டும். தலை குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு தலை முழுவதும் இப்படி தேய்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
வாரத்திற்கு இதை இரண்டு நாள் போடும்போது முடி உதிர்வு நன்றாக குறைந்திருப்பதை கண்கூடாக காண முடியும். இப்போது வடிகட்டி வைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதில் உங்களுக்கு விருப்பமான ஷாம்புவை சேர்த்துக் கொள்ளவும். ஏற்கனவே போட்டிருக்கும் பேக்கில் இந்த ஷாம்பு தண்ணீரை சேர்த்து நன்றாக மசாஜ் செய்துவிடவும். இப்படி தலைக்கு குளித்து பாருங்கள் முடி உதிர்வு என்பதே சுத்தமாக ஏற்படாது.
முடி வளர எண்ணெய் தயாரிப்பது எப்படி?
இப்போது இரண்டு கைப்பிடி கருவேப்பிலை இலைகள், ஒரு கைப்பிடி கரிசலாங்கண்ணி இலை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துக் கொண்டு இதில் 1/2 தேக்கரண்டி வெந்தயம், 1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம், 1 தேக்கரண்டி ரோஸ்மேரி இலைகள் சேர்த்துக் கொள்ளவும்.
இதை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை அரைத்து எடுக்கும் போது சற்று கொரகொரப்பாக இருக்கும். இப்போது இந்த பொடி மூழ்கும் அளவு தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும். இதை இப்படியே சிறிது நேரம் வைக்கும் போது நன்றாக ஊறியிருக்கும்.
இந்த பவுலை வெயிலில் 3 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு எண்ணெய்யை எடுத்துப் பார்த்தால் நிறம் நன்றாக மாறியிருக்கும். இந்த எண்ணெய்யை வைத்து தலையில் தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தலாம்.
இதை தொடர்ந்து செய்து வரும்போது முடி உதிர்வே இருக்காது. பேன் தொல்லை, பொடுகு தொல்லை நீங்கி முடி நன்றாக நீளமாக வளரும். உங்களுக்கும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தால், இந்த டிப்ஸை கண்டிப்பாக ட்ரை பண்ணிப் பாருங்கள்.