ஒரு நெயில் பாலிஷின் விலை கோடிக்கணக்கிலா? வியக்க வைக்கும் ஃபேஷன் உலகம்!

amazing world of fashion
amazing world of fashion
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

பொதுவாக மார்க்கெட்டில் நெயில் பாலிஷ் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் ஒரு நெயில் பாலிஷ் கோடிக்கணக்கான ரூபாயில் விற்கப்படுகிறது என்றால்  நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை. ஃபேஷன் மற்றும் ஆடம்பர உலகில் இது சாத்தியமாகிறது. நக அலங்காரம் என்பது நம்முடைய விரல்களின் அழகை மேம்படுத்தும் ஒரு வழியாகும். இவை பெரும்பாலும் நம்மை அழகாகக் காட்டுவதுடன், விரல் நகங்களை கவர்ச்சிகரமாக தோற்றமளிக்க செய்கின்றன. வண்ண வண்ண நெயில் பாலிஷ்கள், நகைகள் பதிக்கப்பட்ட நகங்கள் போன்றவை ட்ரெண்டாக உள்ளது.

விரல்களின் அழகை மெருகூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் நெயில் பாலிஷ் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் அஸ்ஸாஹர் போகோசியன் உருவாக்கியுள்ள நெயில் பாலிஷ் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. இந்த நெயில் பாலிஷ் 'அஸ்ஸாஹர் பிளாக் டயமண்ட் நெயில் பாலிஷ்' (Azature Black Diamond Nail Polish)என்று அழைக்கப்படுகிறது.

இது கருப்பு வைரங்களால் செய்யப்பட்ட விலைமதிப்பு மிக்க அரிதான நெயில் பாலிஷாகும். இதில் உண்மையான கருப்பு வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது இதில் 267 கேரட் கருப்பு வைரங்கள் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அழகான கருப்பு நிற நெயில் பாலிஷ் இன் விலை 250,000 டாலராகும். அதாவது நம் இந்திய மதிப்பில் சுமார் 1.9 கோடி ரூபாயாகும்.

இது சொகுசு நகை பிராண்டான ஆசாத்ரூரால் 2023ல் தயாரிக்கப்பட்டது. இது சேகரிப்பாளரின் பொருளாகக் (collector's piece) கருதப்படுகிறது. 14.7 மில்லி (0.5 oz) அளவிலான வைர வடிவக் குடுவையில் வருகிறது. இதற்கு முன்பு சுமார் 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Models Own-ன் Gold Rush நெயில் பாலிஷ் உலகிலேயே விலை உயர்ந்ததாக கருதப்பட்டது.

உலகின் விலை உயர்ந்த நெயில் பாலிஷ் என்ற பட்டத்தை பெற்றுள்ள இது தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது ஒரு சாதாரண நெயில் பாலிஷ் போலத் தோன்றலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால் அதன் ரகசியம் நமக்கு புலப்படும். இதில் 267 கேரட் கருப்பு வைரங்கள் கலக்கப்பட்டுள்ளன. ஒரு உண்மையான வைரத்தின் பளபளப்பை கொண்டுள்ள இதுவே இதன் அதிக விலைக்கு முக்கிய காரணமாகும். தினசரி பயன்பாட்டிற்காக இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காட்டலாம். 

இதையும் படியுங்கள்:
வெறும் 10 நிமிடத்தில் முகத்தில் ஒரு 'குளோ': சருமத்தை பளபளக்க வைக்கும் இயற்கை வழிகள்!
amazing world of fashion

பலர் ஆடம்பர கார்கள், கை கடிகாரங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களை உபயோகிப்பதுபோல இதனை உபயோகிக்க தயக்கம் காட்டலாம். இது போன்ற அதிக விலை கொண்ட பொருளை வாங்குவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிப்பதுண்டு. என்றாலும் 25 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் இந்த பிளாக் டயமண்ட் நெயில் பாலிஷை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல  ஹாலிவுட் பிரபலம் கெல்லி ஆஸ்போர்ன்(Kelly Osbourne) போன்ற சிலர் இதை பயன்படுத்தியதுடன் அதை தனது சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துகொண்டனர். இந்த நெயில் பாலிஷ் அழகுப் பொருளைவிட ஒரு சொகுசுப் பொருளாகவே கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com