ஒரு முட்டையும்... ஒரு எண்ணெயும்... முடி உதிர்வை நிறுத்தும் சீக்ரெட்!

இந்தச் 'சீக்ரெட் புரதச் சிகிச்சை' மூலம், தீபாவளிக்கு உங்கள் முடி வலுவாக, ஆரோக்கியமாக மற்றும் ரோஜா போலப் பளபளப்பாக இருக்கும்!
Hairfall
Hairfall remedy
Published on

பண்டிகைக் காலங்களில் முகம் மட்டுமல்ல, கூந்தலும் பளபளப்பாக ஜொலிக்க வேண்டும். விலையுயர்ந்த பார்லர் சிகிச்சைகளுக்குச் செல்லாமல், உங்கள் வீட்டுக் கிச்சனில் இருக்கும் அற்புதப் பொருட்களைக் கொண்டே, கூந்தலுக்குத் தேவையான புரதச் சத்து மற்றும் ஆழமான பளபளப்பை வழங்க முடியும். முட்டை மற்றும் எண்ணெய்களைப் பயன்படுத்தி எப்படி ஒரு மலிவான, சூப்பரான ஹேர் பேக்கைத் தயாரிப்பது என்று பார்ப்போம். (Hairfall remedy)

புரதச் சிகிச்சையின் அவசியம்....

நம் கூந்தலின் அடிப்படை கட்டுமானப் பொருளே கெரட்டின் (Keratin) என்ற புரதம்தான். இரசாயனச் சிகிச்சைகள், சூரிய ஒளி மற்றும் சுற்றுப்புற மாசுபாடு போன்றவற்றால் கூந்தலில் உள்ள கெரட்டின் சிதைவடையும்போது, முடி பலவீனமாகி, உடைந்து, பளபளப்பை இழக்கிறது.

அந்த வகையில், முட்டை இதற்கு பெரிதளவில் உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகளவிலான புரதமும், மஞ்சள் கருவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இது, உடைந்த முடி இழைப் பிணைப்புகளைச் சரிசெய்து, உள்ளே இருந்து வலுவூட்டுகிறது.

இந்த புரதத்துடன் எண்ணெய் சேரும்போது, புரதம் முடியின் உள்ளே செல்ல உதவுகிறது. ஆலிவ் ஆயிலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியின் ஈரப்பதத்தைப் பூட்டி வைத்து, வெளிப்புற அடுக்கை (Cuticle) மென்மையாக்கி, அதிக பளபளப்பைக் கொடுக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இரவில் அடிக்கடி வாய் உலர்ந்து போகிறதா? அது சர்க்கரை நோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.. உஷார்!
Hairfall

'முட்டை மற்றும் எண்ணெய்' ஹேர் பேக் செய்முறை...

இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்வது முடிக்கு விரைவான பலனைக் கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

  • முட்டை (முடி நீளத்திற்கு ஏற்ப 1 அல்லது 2 முழு முட்டைகள்).

  • ஆலிவ் ஆயில் (Olive Oil) அல்லது தேங்காய் எண்ணெய் (Coconut Oil) – 2 முதல் 3 தேக்கரண்டி.

  • தேன் (விருப்பப்பட்டால்) – 1 தேக்கரண்டி (ஈரப்பதம் மற்றும் பளபளப்பிற்காக).

பயன்படுத்தும் முறை:

  • ஒரு கிண்ணத்தில் முட்டையை நன்றாக அடித்துக் கலக்கவும். அதனுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணெய் (ஆலிவ் அல்லது தேங்காய்) மற்றும் தேனைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

  • இந்தக் கலவையைத் தலைமுடியின் வேர்களில் இருந்து ஆரம்பித்து, நுனி வரை தடவவும். குறிப்பாக, மிகவும் சேதமடைந்த நுனிப் பகுதிகளில் அதிகமாகவே பூசவும்.

  • பேக்கைத் தலையில் தடவிய பிறகு, ஒரு ஷவர் கேப் அல்லது சூடான துணியால் தலையைச் சுற்றவும். இது, பேக்கிலுள்ள சத்துக்களை முடி உள்ளிழுக்க உதவும். சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் காத்திருக்கவும்.

இதையும் படியுங்கள்:
இயற்கை அழகை மேம்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்!
Hairfall

4.  பேக் காய்ந்த பிறகு, முதலில் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி முடியை அலசவும். சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது முட்டையை வேக வைத்து, முடியில் ஒட்டிக்கொள்ளச் செய்துவிடும். லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியை அலசினால், முட்டையின் வாசனை நீங்கி, கூந்தல் பட்டுப் போல மின்ன ஆரம்பிக்கும்.

இந்தச் 'சீக்ரெட் புரதச் சிகிச்சை' மூலம், தீபாவளிக்கு உங்கள் முடி வலுவாக, ஆரோக்கியமாக மற்றும் ரோஜா போலப் பளபளப்பாக இருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com