இயற்கை அழகை மேம்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்!

beauty tips
natural beauty tips
Published on
mangayar malar strip

பார்வைக்கு அழகு பழகுவதற்கு அழகு என்பதோடு மட்டும் பெண்கள் நின்று விடக்கூடாது. அந்த அழகை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று சிந்தனை வேண்டும். அப்படிப்பட்டவர்களின் அழகு நீடிக்க இங்கு வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

ழகு நிலைப்பட சின்ன சின்ன உடற்பயிற்சிகள் அவசியம். காலை எழும் பழக்கத்தை முதலில் கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். எழுந்ததும் வாக்கிங் போகலாம். காலரா நடக்கும்போது அந்த காலை காற்றின் சுகமான சிலிர்ப்பை உடல் முழுக்க உணரலாம். கொஞ்சம் ஓடவும் செய்யலாம். தினமும் இதை தொடர்ந்தால் உடற்பயிற்சி செய்த திருப்தியும் சுத்தமான காற்றை சுவாசித்த மகிழ்ச்சியும் அடையலாம்.

ரவில் எந்நேரம் வரை விழிக்க வேண்டுமானாலும் ரெடி ஆனால் காலையில் எழும்பவேண்டுமானால் ஐயோ நானா என்று அதிர்ச்சி காட்டுபவர்களுக்கு சூரிய ஒளியின் பயன்கிட்டாது. காலை எழுந்து சூரிய ஒளி உடம்பில் படும்படி நடமாடுபவர்களுக்கு வைட்டமின் டி இலவசமாக கிடைத்து விடுகிறது. நாள் முழுக்க புத்துணருடன் இருப்பவரை கேட்டுப்பாருங்கள் காலை சூரிய ஒளியில் ஒரு பத்து நிமிடமாக நிச்சயம் உலா வந்திருப்பார்கள்.

ரோக்கிய வாழ்க்கை வாழ ஆசை உள்ளது. ஆனால் நகர வாழ்க்கையில் அது நடக்குமா என பெருமூச்சுவிடுகிற ரகமா நீங்கள்? வாகன புகை, குவிந்து கிடக்கும் குப்பைகள், என்பவற்றால் சுகாதாரம் பலருக்கு கிட்டாது. நகரை விட்டு கொஞ்சம் ஒதுங்கி வாழலாம் சுத்தமும் சுகாதாரமும் உங்கள் சொந்தமாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
நிகழ்வுச் சுற்றுலா: பொருளாதாரத்தை மேம்படுத்தும் வாய்ப்பு!
beauty tips

சுத்தக்காற்றை சுவாசிப்பவர்களுக்கு சுத்தமான தண்ணீரும் அவசியம். குடிக்கிற தண்ணீர் மட்டும் இன்றி குளிக்கிற தண்ணீரும் கூட சுத்தமாக இருந்தால் மட்டுமே சுகாதார உணர்வு நிச்சயம். காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை பருகலாம். தினமும் ஏழு எட்டு டம்ளருக்கு குறையாமல் பருகினால் ஜீரண பிரச்சனை இல்லை. அது போல் வெந்நீர் குளியல் மனமகிழ்வு மட்டுமின்றி தேகத்தில் தோல் சம்பந்த வியாதிகளையும் தவிர்க்கிறது.

னசை சுத்தமாக வைத்திருங்கள். சுத்தமான இருதயமே உடம்புக்கு சிறந்த மருந்தாகி விடுகிறது நல்ல சிந்தனைகள் உயர்வான எண்ணங்கள் ஒரு மனிதனை நோய்க்கு அப்பால் வைக்கின்றன. பார்த்த மாத்திரத்தில் இப்படிப்பட்டவர்கள் முகம் மிகப் பிரகாசமான ஒளிப் பொருந்தியதாக இருக்கும். கண்களில் கருணை தெரியும்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை புதுமை பெண்களுக்கு அழகு என்பதில் தவறில்லை. ஒருவரின் கம்பீரத்திற்கு நிமிர்ந்து நிற்கும் முதுகு முக்கியம் முதுகு புறம் வளைந்து அல்லது கொஞ்சம் குனிந்தபடியே நடப்பவர்கள் தங்கள் முதுகுப்புற அழகில் முக்கியத்துவம் காட்டாதவர்கள் என்றே கூறப்படுவர். கை கால்களை மடக்கி கைகளை வீசி போட்டு கொஞ்ச நேரம் லெப்ட் ரைட் நடைப்பயிற்சி இந்த மாதிரியான பயிற்சிகள் முதுகை நிமிரவைக்கும். சோர்ந்த மன நிலை  உடல் களைப்பு அடிக்கடி டென்ஷன் இதெல்லாம் முதுகு நிமிர்ந்த நிலையில் விடை பெற்றுவிடும்.

இதையும் படியுங்கள்:
ஆந்திரப் பிரதேசம்: இயற்கை வனப்பும், ஆன்மீகப் பொக்கிஷங்களும்!
beauty tips

முக வசீகரம் மட்டும் அழகல்ல. அழகான தோற்றமும் மட்டும் அழகல்ல. ஒட்டுமொத்த அழகுக்கு பின்னும் ஆரோக்கியமான உடலமைப்பு இருக்கிறது. சுகாதாரமான சுற்றுப்புறம் டென்ஷன் இல்லாத மனநிலை உணவு விஷயத்தில் தனி கவனம்  இப்படி சிரத்தை எடுத்துக் கொள்பவர்களுக்கு வருடம் ஒருமுறை வயது அதிகரித்தாலும் இளமை அப்படியேதான் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com