இப்போது அனைவரின் ஹேர் ஸ்டைலையும் அழகாக மாற்றும் ஒரு முக்கிய பங்கு, ஹேர் ஸ்ப்ரேக்கே உள்ளது. அந்தவகையில் ஹேர் ஸ்ப்ரேவில் உள்ள நன்மைகள் தீமைகள் பற்றிப் பார்ப்போம்.
சமீபக்காலமாக ஹேர் ஸ்ப்ரே ஆண்கள், பெண்கள் என அனைவரிடமும் பிரபலமாகி வருகிறது. ஹேர் ஸ்ப்ரே மாசு, சூரிய ஒளி, அதிகப்படியான வெப்பம் போன்ற அனைத்திலுமிருந்து பாதுகாக்கிறது. இது பல நன்மைகளைத் தந்தாலும், இதில் சில தீமைகளும் இருக்க வாய்ப்புண்டு. ஆகையால், அதனைப் பற்றி விரிவாகக் காண்போம்.
ஹேர் ஸ்ப்ரேயின் நன்மைகள்:
நீங்கள் எந்த சிகை அலங்காரத்தை விரும்பினாலும், ஹேர் ஸ்ப்ரே உதவியிருந்தால், எளிதாக செய்துவிடலாம். ஏனெனில் கையில் அடங்காத முடிகளையும் ஹேர் ஸ்ப்ரே அடக்கி அழகாக மாற்ற உதவும். இதனால், முடி சிக்கலாவதைத் தடுக்கலாம். அதேபோல் இயற்கையானகவீட்டில் செய்த ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தினால், பொடுகு போன்ற தொல்லைகளிலுமிருந்து விடுபடலாம்.
உங்களது முடி மிகவும் மெல்லியதாக இருக்கிறது என்று கவலைப்பட்டால், நீங்கள் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். ஏனெனில், அப்போது உங்கள் முடி அடர்த்தியாக இருப்பது போல இருக்கும். அதேபோல் இதனை அடிக்கடிப் பயன்படுத்துவதால், முடி பாதிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், முக்கியமான சமயங்களில் மட்டும் பயன்படுத்துங்கள்.
குட்டையான முடி கொண்டவர்கள், ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவதன் மூலம், கூந்தலை அடர்த்தியாகவும் அழகாகவும் கொண்டு வரலாம்.
ஹேர் ஸ்ப்ரேயின் பக்க விளைவுகள்:
1. இயற்கையான ஹேர் ஸ்ப்ரேக்களின் விலை அதிகம். மலிவான ஹேர் ஸ்ப்ரேக்களில் பொதுவாக முடி சேதத்தை ஏற்படுத்தும் இரசாயனங்கள் அதிகம் உள்ளன.
2. ஹேர் ஸ்ப்ரேக்களே உங்கள் முடியை சீர் செய்கின்றன. ஆகையால், சீப்பால் சீவ வேண்டாம். இது உங்கள் முடியை சேதப்படுத்தும்.
3. தினமும் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தினால், சிறிது காலத்தில் முடி உதிர்வை சந்திக்க நேரிடும்.
4. இது மிகவும் முக்கியமானது. இரசாயனம் கலந்த ஹேர் ஸ்ப்ரேக்களை மறந்தும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், இவை உங்கள் தலையில் அரிப்பை உண்டாக்கி தொற்றை ஏற்படுத்தும். சில சமயங்களில் வழுக்கைக்கும் வழிவகுக்கும்.
5. ஆல்கஹால் இல்லாத இயற்கையான ஹேர் ஸ்ப்ரேவை தேர்ந்தெடுப்பது நல்லது.
இவையனைத்திற்கு மேல், ஹேர் சீரத்தை மிகச் சிறிய அளவு தடவுதல் நல்லது. அதிகமாகப் பயன்படுத்துவதும் ஆபத்தாகிவிடும். ஆகையால், ஹேர் சீரத்தைப் பயன்படுத்தும்போது சில விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது.