பெண்களுக்கு விதவிதமான காலணி அணிவதில் எப்போதுமே அலாதி பிரியமுண்டு. உடைக்கு ஏற்ற நிறத்தில் காலணி அணிய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். அதை அறிந்து கொண்டு விற்பனையாளர்களும் விதவிதமான டிசைன் மற்றும் மாடல்களில் சந்தையில் காலணிகளை கொண்டு வந்துள்ளனர். அத்தகைய விதவிதமான காலணிகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க.
பிளிப் பிளாப் (Flip flop)
கோடைக்காலத்தில் பிளிப் பிளாப் இல்லாமல் கழிப்பது என்பது முடியாத காரியம். இது மிகவும் தட்டையான காலணியாகும். Y வடிவத்தை கொண்ட தோல் வாரை கொண்டது. இதை ‘தாங் சேன்டல்’ என்றும் அழைப்பார்கள். 4000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர்கள் இதை அணிந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெட்ஜஸ் (Wedges)
பெண்கள் அணியக்கூடிய மிகவும் வசதியான செருப்புகளில் இதுவும் ஒன்று. இதை அணிந்து கொண்டு நடப்பது சுலபமாகவும், வசதியாகவும் இருக்கும். இந்த செருப்புக்கு பெண்கள் மத்தியில் எப்போதுமே மவுசு உண்டு.
ஸ்நீக்கர்ஸ் (Sneakers)
ஸ்நீக்கர்ஸ் பெண்கள் அணியக்கூடிய ஸ்போர்ட்ஸ் ஷூவாகும். இதை தினமுமே அணிந்து கொள்ள வசதியாகவே இருக்கும். இதை Leather, fabric போன்றவை வைத்து செய்யப்படுகிறது. இது பலவிதமான டிசைன் மற்றும் நிறத்தில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீல்ஸ் ஷூ (Heels shoe)
பெண்கள் தங்களை சற்று உயரமாக காட்டி கொள்வதற்காக இந்த ஷூவை அணிந்து கொள்வார்கள். இதை திருமணம், கிரேஜூவேசன், மீட்டிங் போன்று முக்கியமான நிகழ்ச்சிகளுக்கே அணிவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
பூட்ஸ் (Boots)
இந்த காலணி பாதத்திலிருந்து கால்முட்டி வரை இருக்கும். குளிர்ந்த பிரதேசத்தில் குளிரை தாக்குப்பிடிக்கவே இதுபோன்ற காலணிகள் தயாரிக்கப்படுகிறது. இது நம்முடைய கால்களை மழை, குளிர், பனி போன்ற வற்றிலிருந்து பாதுகாக்கிறது. இந்த காலணி எண்ணற்ற நிறத்திலும், டிசைனிலும் வருகிறது.
ஸ்டில்லட்டோஸ்(stilettos)
இந்த காலணி மெலிதான, உயரமான ஹீல்ஸை கொண்டிருக்கும். இந்த காலணியில் இருக்கும் ஹீலின் உயரம் 1 முதல் 10 இன்ச் கொண்டதாக இருக்கும். பெண்களின் மத்தியில் பிரபலமானதும், மிகவும் பேஷனான ஹீல்ஸ் ஸ்டில்லட்டோஸ் ஆகும்.
ஜூட்டிஸ் (Juttis)
ஜூட்டிஸ் இந்திய பெண்களிடம் மிகவும் பிரபலமான காலணியாகும். இது உருவானது வட இந்தியாவாக இருந்தாலும் இன்று இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளது. இது தட்டையான காலணியாகும் முன்பக்கம் ஷூ போன்ற அமைப்புடன் லெதரால் செய்யப்பட்டு எம்ராய்டரி வேலை செய்யப்பட்டிருக்கும். பலவித டிசைன் மற்றும் நிறங்களில் இது வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாபூரி செப்பல் (Kolhapuri chappal)
இந்தியாவில் பிரபலமான காலணிகளில் கோலாபூரி செப்பலும் ஒன்றாகும். கால் கட்டை விரலில் மாட்டிக்கொள்வது போல அமைந்திருக்கும் இந்த செருப்பு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கோலாபூரி என்னும் இடத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது 12 ஆம் நூற்றாண்டிலிருந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏன்கிள் பூட் (Ankle boot)
காலில் உள்ள மூட்டு பகுதி வரையே உள்ள இந்த வகை பூட்ஸ் தற்போது பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதை திறந்து மூட Zip கொடுக்கப்பட்டுள்ளது. இது தட்டையாகவும், ஹீல்ஸுடனும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.