
நீங்கள் அளவுக்கு அதிகமாக உயரமாக இருப்பதாக உங்களுக்கு தோன்றினால் சேலையை தரையில் புரளுமாறு தழைய தழைய அணியுங்கள்.
சோளியை குறைந்த பட்சம் முழங்கையைத் தொடுமாறு அணியுங்கள் நீங்கள் இவ்வாறு செய்தால் உங்கள் உயர தோற்றம் சற்று குறைந்ததுபோல இருக்கும்.
உங்கள் உடல் அளவுக்கு அதிகமாக பருமனாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் சற்று அழுத்தமான வண்ணங்கள் கொண்ட சேலைகளை வழக்கமாக அணியுங்கள் தோற்றத்தில் சற்று மெலிந்த மாதிரி இருப்பீர்கள்.
மாநிறம் கொண்ட பெண்கள் தூய வெள்ளை நிற உடையினை அணிந்தால் எடுப்பாக அழகாக இருக்கும்.
கருப்பு நிறமுடைய பெண்கள் முற்றிலும் வெண்மையான ஆடைகளை அணிந்து கொள்ளக்கூடாது. அவ்விதம் செய்தால் கருப்பு நிறத்தை அதிகப்படுத்தி காண்பிக்கும்.
அழுத்தமான வண்ணம் உடைய சேலைகளை கூடத்தினால் சிவப்பு நிறம் உடைய பெண்களுக்கு அழகாக இருக்கும்.
பெண்கள் எத்தனை தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் மக்கள் ஏராளமாக வரக்கூடிய திருமண விழாக்கள் ஆலய விழாக்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது கண்களை பறிக்கும் விதத்தில் உடைகளை அணியாமல் எளிய உடைகளை அணிவது நல்லது அந்த மாதிரி இடங்களுக்கு பகட்டான உடைகளுடன் செல்லும்போது மனோதத்துவ ரீதியில் பிறருக்கு அவர்களை பார்க்கும்போது கௌரவமான எண்ணம் ஏற்படாது.
அகலமான கரையும் படுக்கை கோடுகளும் கொண்ட சேலைகளை உடுத்தினால் மிகவும் உயரமான பெண்கள் சற்று உயரம் குறைந்தவர்களாக காட்சி தருவார்கள்.
சேலையின் வண்ணத்துக்கும் முற்றிலும் மாறுபட்ட வண்ணமுடைய கலரில் பிளவுஸ் அணிந்தாலும் உயரமான பெண்களின் தோற்றம் சற்று உயரம் குறைவாக மாறி தோன்றும்.
மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது பிளவுஸின் கைகள் கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.
கடைகளுக்குச் செல்லும்பொழுது லேசான நிறம் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சூழ்நிலைக்கேற்ப பாந்தமாக இருக்கும்.
பெண்கள் அணிவது அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கிறது.
பெண்கள் அணியக்கூடிய பிளவுஸ்களின் கைகளிலும் கழுத்திலும் வேலைப்பாடுகள் தாராளமாக இருந்தால் எந்த வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.
கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்தி சென்றால் பாந்தமாக இருக்கும்.
வெயில் காலத்தில் பிளவுஸை இறுக்கமாக அணியும்போது வியர்வை காரணமாக பிளவுஸ் நனைந்துவிடும். நனைந்து ஈரமான பிளவுஸ் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அதனுடன் வியர்வையினால் ஏற்படும் வாடையும் சங்கடமான உணர்ச்சியை தோற்றுவிக்கும் கோடையின் காலங்களில் மட்டும் சற்று தளர்த்தியாக பிளவுஸ் அணிவது பலவிதத்திலும் நல்லதாகும்.
மாலை நேரத்தில் நடைபெறக்கூடிய வரவேற்பு நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொள்ளும்போது லேசான வண்ணம் உடைய சேலை உடுத்தி சேலை வண்ணத்தில் அழுத்தமான வண்ணத்தில் பிளவுஸ் அணிந்து சேலை வண்ணத்துக்கு மாறுபட்ட லேசான சல்லாத்துணியை மேலே போர்த்திக் கொண்டு சென்றால் பாந்தமாக இருக்கும். .
சேலை அணியும்போது அவற்றின் மடிப்புகள் சீராக சரியாக இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும் புடவையின் மடிப்புகள் தான் புடவை அணிவதன் அழகை பளிச்சென்று எடுத்துக்காட்டும் புடவை தாறுமாறான மடிப்புகளுடன் காணப்பட்டால் விகாரமாக இருக்கும்.
மிகவும் மெல்லியதாகவும் லேசான வண்ணம் கொண்டதாக உள்ள சேலை அணியும்போது சேலை நல்ல கனமான வண்ணத்தில் தைக்கப்பட்ட உள்பவாடையினை அணிந்துகொள்ள வேண்டும் பாவடை நிறத்திலேயே உள்பாடியும் அணிந்து கொண்டால் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கும்.
சாதாரணமாக பெண்கள் பாவாடை அணியும்போது புடவைக்கும் பாவாடைக்கும் பொருத்தம் பார்த்து அணிவதில்லை. ஏதோ ஒரு பாவாடை அணிந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் இது கூடாது. புடவை எந்த வண்ணத்தில் அணிகிறோமோ அதே வண்ணத்தில் பாவாடை அணிந்தால்தான் எடுப்பாக இருக்கும் இவ்விடம் பொருத்தம் பார்க்காமல் புடவையில் வண்ணத்திற்கு சற்றும் தொடர்பு இல்லாததை தைத்து பாவாடை அணியும்போது புடவையை நிறம் மாறினால் போல இருக்கும் இது பழம் புடவை உடுத்தி இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.