
‘ஒரு பட்டுப் புடவையை நெய்யும்போதே அது யாருக்கு சென்று சேர வேண்டும் என்பது முன்பே எழுதப்பட்டிருக்கும்’ என்று சொல்வார்கள். எனவே, உங்களுக்கான பட்டுப் புடவையை நீங்கள் தேடி வாங்கும் போது அதில் கண்டிப்பாக கவனித்து வாங்க வேண்டிய சில டிப்ஸ்களை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. முதலில் நீங்கள் எந்த நிகழ்ச்சிக்காக பட்டுப்புடவை வாங்க போகிறீர்கள், எந்த நிறத்தில் வாங்க போகிறீர்கள், என்ன பட்ஜெட்டில் புடவை வாங்க போகிறீர்கள்? என்பதை முன்கூட்டியே முடிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
2. நீங்கள் வாங்கப் போகும் பட்டுப்புடவையின் Fabric மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும். கையை வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்கும்போது அதில் இருக்கும் ஜரிகை தனித்தனியாக பிரிந்து வரக்கூடாது.
3. எப்போதுமே புடவை வாங்கும்போது அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது Silk mark certification இருக்கிறதா? என்பதாகும். பட்டுப்புடவைக்கு Silk mark certification இருந்தால், அது தூய்மையான பட்டு என்பதை உறுதி செய்துக்கொள்ளலாம்.
4. பட்டுப் புடவையில் இருக்கும் ஜரிகை புடவையின் பார்டர் மற்றும் Pallu ஆகிய இரண்டு இடங்களிலும் நெய்தது சமமாக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் இல்லையென்றால் வாங்க வேண்டாம்.
5. பட்டுப் புடவையை வாங்க முடிவு செய்துவிட்டால் நேரில் சென்று வாங்குவதே சிறந்தது. ஆன்லைன் மூலமாக வாங்க வேண்டாம். ஏனெனில், புடவையின் ஒவ்வொரு நிறத்திற்கும் நிறைய Shades இருக்கிறது. எனவே, நீங்கள் நினைத்த கலர் டோன் இல்லாமல் வேறு நிறம் மாறிவிட அதிக வாய்ப்புகள் உள்ளது.
6. ஒருவேளை ஆன்லைன்னில்தான் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால், வீடியோ காலில் Warm light, Neutral light, Sun light என்று எல்லா வெளிச்சத்திலும் வைத்து பார்த்துவிட்டு பிறகு வாங்குவது நல்லது. இந்த டிப்ஸையெல்லாம் பட்டுப்புடவை வாங்க போகும் போது கண்டிப்பாக ட்ரை பண்ணி உங்களுக்கேற்ற சூப்பர் பட்டுப் புடவையை வாங்கி அசத்துங்கள்.