Skincare routine ல் இன்னுமா இதை காசு கொடுத்து வாங்குறீங்க?

Unwanted skincare product
Unwanted skincare productImage Credits: Cute Pumpkin
Published on

ன்றைய காலக்கட்டத்தில் சருமப் பராமரிப்பு என்பதை மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. முகத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவ்வாறு சருமத்தை பரமாரிக்க எது நமக்கு தேவை, எது நமக்கு தேவையில்லை என்பதை உணர்ந்து வாங்குவது மிகவும் அவசியமாகும். அதைப்பற்றி விரிவாக இந்த பதிவில் காண்போம்.

தற்போது சருமப் பராமரிப்பிற்கு இருக்கும் மோகம் காரணமாக சந்தையில் தேவையில்லாத எண்ணற்ற சருமம் சம்மந்தமான கிரீம், ஜெல் போன்றவை விற்பனைக்கு வந்துவிட்டது. இதுபோன்ற சில விஷயங்கள் நம் சருமத்திற்கு தேவையேயில்லை என்றாலும், அதையும் காசுக்கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். இனி அந்த தவறை செய்யாதீர்கள்.

அப்படி தேவையில்லாமல் காசை போட்டு வீணாக்கும் ஒன்றுதான் Toner. இது ஒருவகையான கிளென்ஸராகும். முன்பெல்லாம் முகத்தை Cleanse செய்தவுடன் சருமத்தில் இருக்கும் மற்ற அழுக்குகளையும், சருமத்தில் உள்ள PH ஐ பேலன்ஸ் செய்வதற்காகவும் டோனரை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது நமக்கு வரும் Cleanser அனைத்துமே நல்ல Effective ஆக இருப்பது மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தில் உள்ள PH ஐ நன்றாக பேலன்ஸ் செய்து சரும பேரியரை பாதிப்படையாமலும் பார்த்துக்கொள்கிறது.

எனவே, இப்போது இருக்கும் சருமப் பராமரிப்பில் டோனர் நமக்கு தேவையேயில்லை. எனவே அதில் அதிகப்படியான பணத்தை போடுவது சுத்த வீண் செலவாகும். அதே பணத்தை ஒரு நல்ல Moisturizer or sunscreen வாங்க பயன்படுத்துவது சிறந்ததாகும்.

இதையும் படியுங்கள்:
வீதிகளின் பெயர்களே வரலாற்றைத் தாங்கி நிற்கும் அதிசயம்!
Unwanted skincare product

இனிமேல் உங்கள் சருமப்பராமரிப்பை சிம்பிளாக வைத்துக்கொள்ளுங்கள். Cleanser, moisturizer, sunscreen பயன்படுத்தினால் சிறந்தது. அதிலும் தற்போது வரும் Moisturizerல் SPF உடன் வருவதால் சன்ஸ்கிரீன் கூட தேவைப்படாது. வெறும் cleanser, SPF moisturizer பயன்படுத்தினால் போதுமானதாகும். சருமப்பராமரிப்பு பொருட்கள் வாங்கும்போது உங்களுக்கான தேவைக்கு ஏற்றதுபோல வாங்குங்கள்.

அதுவே சரும ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். சருமத்தில் போடும் கிரீம்களை Thinnest to thickest consistency என்ற முறையில் போடவேண்டும். உதாரணத்திற்கு முதலில் சீரம், மாய்ஸ்டரைசர், கடைசியாக சன் ஸ்கிரீன் என்று போடுவது சரும பராமரிப்புக்கு சிறந்ததாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com