என்றும் இளமை தரும் அர்கன் ஆயில்: வறண்ட சருமத்தை சோலையாக்கும் ரகசியம்!

வயோதிகக் கோடுகளை விரட்டி, பளபளப்பான பொலிவை உடனடியாகப் பெற எளிய வழி.
அர்கன் ஆயில்|a women using argan oil
அர்கன் ஆயில்AI image
Updated on

ங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைக்கக் கூடியது அர்கன் ஆயில். பல நூற்றாண்டாக இது பயன்பாட்டில் உள்ளது. வறண்ட சருமம், வயோதிகம், இவற்றைத் தடுத்து என்றும் இளமையுடன் இருக்க வைக்கும் எண்ணெய் இது.

சருமத்தின் சிறந்த நண்பனாக விளங்கும் அர்கன் ஆயில் ஏன் சிறந்தது?

சருமத்தின் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் ஈ சத்து, கொழுப்பு அமிலங்கள், மற்றும் சிறந்த ஆன்டிஆக்சிடண்டாக விளங்குவதால் இது சருமத்தின் நண்பனாக செயல்படுகிறது. நல்ல அர்கன் ஆயிலில் 80 சதவீதம் கரையாத கொழுப்பு அமிலம் இருப்பதால் உடலுக்கு சிறந்த பாதுகாப்பாக கருதப்படுகிறது‌. மேலும் இதில் இருக்கும் ஈசத்து ஃப்ரீ ராடிகல்களின் சேதத்திலிருந்து சிறந்த பாதுகாப்பை தருகிறது.

முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறந்த மரச்செக்கு அர்கன் எண்ணெயை பயன்படுத்துதல் வேண்டும். நல்ல ஆயில் என்பது ஃப்ரெஷ் ஜுஸ் போன்றது. தீமை தரும் ஆயில் என்பது பாக்கெட்டில் அடைத்து விற்பது போன்றது.

அர்கன் ஆயில்|a fresh argan oil
அர்கன் ஆயில்AI image

வறண்ட முகத்தை சோலையாக்கும் அர்கன் ஆயில் பயன்கள்

நீங்கள் எந்தவித க்ரீமையும் பயன்படுத்த வேண்டாம். உங்கள் முகத்தில் அர்கன் ஆயில் தடவினால் போதுமானது. இதை முகத்தில் தடவியதும் அது ஊடுருவிச் செல்வதால் எந்த வித எண்ணைப் பசையையும் ஏற்படுத்தாது‌. இந்த எண்ணெயை நான் கொமடோஜெனிக் என்பார்கள். அதற்கு அர்த்தம் இது முகத்துளைகளை அடைக்காது இரண்டு மூன்று சொட்டுக்கள் பயன்படுத்தினாலே நல்ல பலனைத்தரும் .

உங்கள் முகம் சகாரா பாலைவனம் போன்று காய்ந்த நிலையில் உள்ளதா?. இது சோலை மாதிரி உங்களுக்கு பயன்படும். இந்த எண்ணைக்கு சருமத்தை ஊடுருவிச் செல்லும் பண்பு உள்ளதால் உங்கள் முகம் வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் இருக்கும். இதோடு கூட வேறு எண்ணையும் சேர்த்து பயன்படுத்தலாம்.

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதால் முகத்தில் சுருக்கங்கள் கோடுகள் தவிர்க்கப்பட்டு பொலிவாகும். இது தினமும் உங்க இளமையை தூண்டுவதாக கருதப்படுகிறது. அர்கன் ஆயிலில் பண்பு முகத்தில் எண்ணெயை நன்கு பாலன்ஸ் செய்வதாலும் மேலும், இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூலமும் முகப்பருக்களை தடுக்கிறது. சென்சிடிவான சருமத்திரனரருக்கு இது ஏற்றது. எக்சிமா ரோசாசியா போன்ற சருமம் பிரச்னைகளை தீர்க்கக்கூடியது.

உங்கள் முகத்தில் மேக்கப்பை கலைக்க கெமிக்கல்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த ஆயிலை முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து மேக்கப்பை களையலாம்.

உங்கள் முகத்திற்கு மட்டுமல்ல உடல் முழுவதும் நீங்கள் இந்த எண்ணையை பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம். உங்கள் வறண்ட பாதங்களை இது மென்மையாக்கும். நகங்களில் இந்த எண்ணையை தடவ நகம் உடையாமல் பாதுகாக்கும். வறண்ட முடியை உடையவர்கள் இந்த எண்ணை மசாஜ் செய்து கழுவ முடி பளபளப்புடன் நிகழ்வதை உணர்வீர்கள்.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் தலைமுடி உதிர்வை தடுக்கும் சீக்ரெட்... இது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
அர்கன் ஆயில்|a women using argan oil

முதுமையைத் தடுத்து இளமையைக் கூட்டும் அர்கன் ஆயில்

வறண்ட சருமத்தை நீரேற்றமாக்குவது மற்றும் வயதான தோற்றத்தை தடுப்பது போன்றவைகள் இதை பயன்படுத்திய ஆறு வாரங்களில் வித்தியாசத்தை உண்ர்வதாக தெரிகிறது.‌‌ எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் உங்கள் இளமையை தக்க வைக்கும் அர்கன் ஆயிலை பயன்படுத்தி நலனைப் பெறுங்கள்.

இனி எந்தவித ரசாயன க்ரீம்களும் தேவையில்லை; வெறும் ஆறே வாரங்களில் உங்கள் வறண்ட சருமம் பட்டுப்போல மாறி, சுருக்கங்கள் மறைந்து, என்றும் 20 வயது இளமையோடும் திகைப்பூட்டும் பொலிவோடும் திகழ்வதை நீங்கள் கண்ணாடியில் காண்பது உறுதி.

logo
Kalki Online
kalkionline.com