

சரும அழகைப் பாதுகாக்க பல வழிகளை கடைப் பிடிக்கிறோம்.அதில் ஒன்றுதான் அரோமாதெரபி. அரோமா என்றால் நறுமணம். இயற்கையாக கிடைக்கும் செடிகள், பூக்கள், மரங்களின் வேர்களிலிருந்து அரோமா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
கெமிக்கல் இல்லாததால் பக்க விளைவுகள் இருக்காது. இவை அழகோடு, உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. ரோஜா, மல்லி, சாமந்தி, லாவண்டர் போன்ற பூக்களில் இருந்து எடுக்கப்படும் அரோமா எண்ணைய்களை கூந்தல் மற்றும் சரும அழகை பராமரிக்க பயன்படுத்துகிறோம்.
அரோமா எண்ணையை இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், வலிப்பு நோயாளிகள், உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தகுந்த ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக் கூடாது.
இதில் எசென்ஷியல் ஆயில்,கேஸ்டர் ஆயில் என்று இரண்டு வகை உள்ளது. இயற்கையான பொருள் களிலிருந்து நேரடியாக தயாரிப்பதால் இவற்றிற்கு வீரியம் அதிகம் இருக்கும். எனவே அப்படியே பயன்படுத்தக் கூடாது.
எண்ணெய் சருமத்திற்கு 2ஸ்பூன் சூரிய காந்தி எண்ணையுடன் 2சொட்டு சைப்ரஸ் ஆயில் கலந்து பஞ்சால் முகத்தை துடைத்துவிட எண்ணெய் பசை நீங்கி சருமம் நார்மலாக இருக்கும்.
2 டீஸ்பூன் பாதாம் எண்ணையுடன் மூன்று சொட்டு ஃபிராங்கின்சன்ஸ் எண்ணைக் சேர்த்து முகத்தில் தடவி வர சருமத்தில்,முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி சருமம் மென்மையாக இருக்கும்.
ஐந்து சொட்டு எலாங்-எலாங் எண்ணையை தலையணையில் தடவி தலைவைத்துப் படுத்து வர நல்ல தூக்கம் வரும்.
நெரோலி ஆயிலை கேரியர் ஆயிலுடன் கலந்து வயிற்றில் தடவி வந்தால் மாதவிலக்கின போது வரும் வலி சரியாகும்.
இரு டீஸ்பூன் நல்ல எண்ணையுடன் இரண்டு சொட்டு சேஜ் ஆயில், 2சொட்டு கேமோமைல் ஆயில் கலந்து வாரம் இருமுறை தடவினால் நரைமுடி அதிகமாகாமல் தடுக்கும்.
வெதுவெதுப்பான நீரில் 4சொட்டு பச்சோளி ஆயில் கலந்து அதில் கைகளை பத்து நிமிடம் வைத்திருக்க சொரசொரப்பு மாறி மென்மையாக இருக்கும்.
பழைய கொசு மேட்டில் ஒரு சொட்டு லாவண்டர் அல்லது ரோஸ் ஆயிலை விட்டால் மனம் இலேசாகி சுகமான தூக்கம் வரும்.
சில சொட்டுகள் யூகலிப்டஸ் எண்ணெயை சுடுநீரில் சேர்த்து பத்து நிமிடம் கால்களை வைத்திருக்க கால்வலி சரியாகும்.
சுடுநீரில் 5சொட்டு தைம் ஆயில் விட்டு ஆவிபிடிக்க சோர்வான சருமம் புத்துணர்ச்சி பெறும்.
சாமந்தி எண்ணையுடன் கேரியர் ஆயிலில் கலந்து தடவி வர சருமம் பளபளப்பாகும்.
மூன்று சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் உடன் கலந்து தலையில் தடவி வர மசாஜ் செய்து தடவினால் பொடுகு நீங்கி முடி செழித்து வளரும்.
இரு டேபிள்ஸ்பூன் டீ டிகாஷனை நான்கு சொட்டு ஆரஞ்சு எண்ணெய் கலந்து முகத்தில் ஒற்றி எடுக்க சரும துவாரம் அடைபடும்.
பெப்பர்மின்ட் ஆயிலை தடவினால் பாதம் மிருதுவாகும்.
அரை சொட்டு லெமன் ஆயில், அரை சொட்டு நெரோலி, ஒரு சொட்டு லாவண்டர் எண்ணையுடன் ஒரு ஸ்பூன் சூரிய காந்தி எண்ணெய் கலந்து முகத்தில் பூசினால் கரும் புள்ளிகள் நீங்கும்.
இவ்வாறு பல்வேறு ஆயில்கள் பல பலன்களை தந்து நம் அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நான் ரோஸ் ஆயில், பெப்பர் மின்ட் ஆயில், பாதாம் எண்ணெய் போன்றவைகளை உபயோகித்து பலன் பெறுகிறேன்.