

வயதாகும்போது ஏற்படும் சில ஆரம்பகால அறிகுறிகளை தவிர்க்க இயற்கை பொருட்களைக்கொண்டு பக்க விளைவுகள் இல்லாமல் சரி செய்ய இயற்கை பொருட்கள் பெருமளவில் உதவுகிறது. அவை என்ன என்று பார்ப்போம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லில்உள்ள அமீனா அமிலங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், சருமங்களில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.
இது வறண்ட கால நிலைகளிலும் செழித்து வளரக்கூடியது என்பதால் இதனுடைய இலைகளில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள் இரண்டும் சேர்ந்து சருமத்திற்கு தேவையான அம்சத்தை தக்க வைக்கும். இது முகப்பருப்புக்களை வரவிடாமல் தடுக்கும். எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஏ பீட்டா கரோட்டின் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் சருமத்திற்கு ஆரோக்கியத்தையும் முதுமையினால் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்யவும் உதவுகிறது.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை சரி செய்ய ஒரு சிறந்த மூலப்பொருள். இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொண்டுள்ளது. ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் சருமத்தை சுத்தம் செய்ய உதவும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டு உள்ளது.
சருமத்தை நீரேற்றத்துடன் வைத்து இளமை தோற்றத்தை தருவதில். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் அதிகரித்தரத்த ஓட்டம் சருமத்திற்கு ஊட்டச்சத்தினை வழங்க உதவுகிறது. வயது முதிர்வு காரணமாக ஏற்படும் புள்ளிகள் கோடுகளை சரி செய்ய உதவுகிறது. சருமத்திற்கு இயற்கையான பளபளப்பும் திரும்ப கிடைக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் மற்றும் பீட்டா ஹைட்ராக்சிக் அமிலம் போன்றவை இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
முகப்பரு, வயது முதிர்வு உதாரணமாக ஏற்படும் நிறமாற்றத்தை குறைக்கவும் உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி இளமை தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ளவும், வயதாவதால் ஏற்படும் அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.
தேன்
தேனில் உள்ள நொதிகள் சருமத்தை மென்மையாக்கி ஈரப்பதம் ஆக்குகிறது. இது கிருமிநாசினி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்துளைகளில் உள்ள அழுக்கை அகற்றுவதால், பிளாக் ஹெட்ஸ்களை அகற்ற உதவுகிறது. இது சருமத்துளைகளை நீரோட்டமாக வைத்து உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. முதுமையின் சுருக்கங்களை மாற்றி அமைக்கிறது.
வேப்பிலை
வேப்பிலையில் உள்ள கால்சியம் மற்றும் லிமோனாய்டுகள் போன்றவை சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள பண்புகள் முகப்பரு சிகிச்சை, வடுக்களை குறைக்க உதவும். சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் ஆகியவற்றைக் குறைத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த ஆற்றல் மிக்க மூலப்பொருள் சரும பராமரிப்பில் இருந்தும் வயதான தோற்றம் ஏற்படுவதில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
இவைகனை பயன்படுத்தி முகச் சுருக்கம் வராமல் பாதுகாக்கலாம்.