ஆண்களின் அழகை கூட்டும் அடர்த்தியான தாடி!

Growing a beard
Growing a beard
Published on

முன்பெல்லாம் தாடி வளர்ப்பது என்பது காதல் தோல்வியை குறிப்பதற்காக இருந்தது. ஆனால் இந்த காலத்தில் ஆண்களுக்கு தாடி வைப்பது ஒரு பேஷனாக ஆகிவிட்டது. பெண்களுக்குமே ஆண்கள் வைத்திருக்கும் தாடியின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். அதனால் தாடியின் மவுசு இளைஞர்களின் மத்தியில் அதிகரித்துவிட்டது.

தாடியை வளர்ப்பதற்காக எண்ணை, க்ரீம் என்று சந்தையில் விற்பனைக்கு வந்து அதுவே பல கோடி வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு அதன் தேவை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஒரு சராசரி ஆணுக்கு 18 வயதிற்குள் முழுமையான தாடி வளர்ச்சி பெற்றுவிடும். இன்னும் சிலருக்கு 30 வயதிற்குள் முழுமையான வளர்ச்சியை பெற்றுவிடும். அதனால் தாடி வளர்க்கையில், ஆண்கள் மன அழுத்தம் கொள்ளாமல் சற்று பொறுமையுடன் இருக்கவேண்டியது அவசியமாகும்.

உங்களை அழகாக காட்டும் தாடியை பராமரிக்க, முதலில் நீங்க வாங்க வேண்டியது Trimmer தான்! உடனே வாங்க...

ஆண்களுக்கு தாடி முழுமையாக வளர 2 முதல் 6 மாதங்கள் பிடிக்கும். அதிலும் ஒவ்வொரு ஆணுக்கும் வளரும் தாடி அவர்களின் வயது, மரபியல், ஹார்மோன் ஆகியவற்றை பொருத்தது.

ஆரோக்கியமான தாடியை வளர்க்க செய்ய வேண்டியவை. தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் பாய செய்யும் முடிகளுக்கும் சேர்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

தாடியை வளர்க்க சந்தையில் விற்கப்படும் எண்ணையை பயன்படுத்தி சருமத்தையும் தாடி முடியையும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளுங்கள்.

தாடியை வளர்ப்பதற்கு விட்டமின்களின் தேவை மிகவும் முக்கியம். ஆரோக்கியமான முறையில் தாடியை வளர்ப்பதற்கு விட்டமின் ஏ, விட்டமின் பி12, பையாடின் ஆகியவை அவசியமானதாகும்.

இதையும் படியுங்கள்:
கரும்புள்ளிகள் மறையவும், முகம் பளபளக்கவும் இயற்கை வழிகள்!
Growing a beard

முக்கியமாக தாடிகளை வளர்ப்பதற்காக சந்தையில் விற்கப்படும் எண்ணைகள் தாடி வளருவதற்கு உதவுவதில்லை. அதற்கு பதில் தாடியை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளவே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிற்றிடத்தக்கது.

வீட்டிலேயே தாடி வேகமாக வளர செய்ய கூடிய வழிமுறைகள், தாடியை தேங்காய் எண்ணை அல்லது ஜோஜோபா எண்ணையை பயன்படுத்தி நன்றாக மசாஜ் செய்யவும். வாரத்திற்கு ஒருமுறை எக்ஸ்பாலியேட் செய்யவும்.

வெங்காயத்தின் சாறை எடுத்து தடவுவதால் தாடி வளரும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

மனஅழுதத்தை குறைப்பது நல்லது. மன அழுத்தம் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை பாதிக்கிறது. இந்த ஹார்மோனே ஆண்களுக்கு தாடி வளர்ச்சிக்கும் மற்றும் பாலியல் ஆற்றலுக்கும் காரணமாகும்.

டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க நல்ல அமைதியான தூக்கம் மிக முக்கியமாகும்.

டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க உடற்பயிற்சி மிக அவசியமாகும்.

மது அருந்துவது கூடாது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தாடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணையின் பங்கு மிக முக்கியமாகும். தேங்காய் எண்ணையை உனவிலே சேர்ப்பது மட்டுமில்லாமல் தாடியிலும் தடவுவது மிகவும் நல்லது.

பூசணி விதையில் துத்தநாகம் உள்ளதால் இது தாடி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக உள்ளது.

இலவங்கப்பட்டை மற்றும் எழுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து பேஸ்ட் செய்து தாடியில் தடவுவது மூலம் நன்றாக தாடி வளர வாய்ப்புகள் உள்ளது. இதில் உள்ள தாதுக்கள் சருமத்தின் துளைகளை திறக்க பயன்படுகிறது.

கீரையில் விட்டமின் ஏ, போலிக் அமிலம், இரும்பு சத்து போன்றவை இருப்பதால் இது தாடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மனவலிமை என்பது பழிவாங்குவதல்ல; கடந்து போவதே!
Growing a beard

புரதசத்து முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. பட்டாணி, பீன்ஸ் போன்ற புரதசத்து அதிகம் உள்ள உணவு முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

மீனிலே ஒமேகா 3 அமிலம் அதிகம் காணப்படுவதால் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

அவ்வப்போது தாடியை எண்ணை தடவி மசாஜ் செய்வதும், சீராக டிரிம் செய்வது முக்கியமான செயல்முறையாகும்.

எனவே தாடி வளர்த்தே ஆகவேண்டும் என்று அதிகமாக உழைப்பையும் அழுத்தத்தையும் அதிலே போடாமல் நிதாமாகவும் பொறுமையாகவும் செயல்பட்டால் நல்ல பலனை காணலாம்.

- நான்சி மலர்

உங்களை அழகாக காட்டும் தாடியை பராமரிக்க, முதலில் நீங்க வாங்க வேண்டியது Trimmer தான்! உடனே வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com