Azelaic Acid Vs Hyaluronic Acid: சருமத்திற்கு எது நல்லது? 

Azelaic Acid Vs Hyaluronic Acid
Azelaic Acid Vs Hyaluronic Acid
Published on

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இன்று பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அவற்றில் Azelaic Acid மற்றும் Hyaluronic Acid ஆகியவை இரண்டும் மிகவும் பிரபலமானவை. இரண்டு தயாரிப்புகளும் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இவற்றில் எது சருமத்திற்கு சிறந்தது என்பதை வாருங்கள் இப்பதிவின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். 

Azelaic Acid

Azelaic Acid என்பதை இயற்கையான தானியங்கள், காளான்கள் மற்றும் பால் போன்ற பொருட்களில் காணப்படும் ஒரு கரியமிலமாகும். இது பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

Azelaic Acid-ன் நன்மைகள்: இது பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதால் சருமத்தில் உள்ள வீக்கத்தைக் குறைத்து முகப்பருக்களை குறைக்க உதவுகிறது. மேலும் ‘மெலஸ்மா’ எனப்படும் முகத்தில் ஏற்படும் பழுப்பு நிற திட்டுகளுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது. சோரோஷியா எனப்படும் முகத்தில் சிவத்தல் எரிச்சல் மற்றும் தடிமனான தோல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த ஆசிடைப் பயன்படுத்தி சோராசியாவை குணப்படுத்த முடியும். Azelaic Acid தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதன் மூலமாக சரும செல்களை சேதத்தில் இருந்து பாதுகாத்து வயதான தோற்றத்தின் அறிகுறிகளை குறைக்கிறது. 

Azelaic Acid தீமைகள்: இந்த ஆசிட் சிலருக்கு எரிச்சல், முகம் சிவத்தல் மற்றும் தோல் உரிதல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானதா என்பது பற்றி எவ்விதமான தகவல்களும் இல்லை. 

Hyaluronic Acid: 

Hyaluronic Acid என்பது நம்முடைய சருமத்தில் இயற்கையாகவே காணப்படும் ஒரு பொருள் ஆகும். இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் அதன் நெகழ்வுத்தன்மையை பராமரிக்கவும் உதவுகிறது. நமக்கு வயதாகும்போது சருமத்தில் உள்ள இந்த ஆசிட் அளவு குறைவதால் வறட்சி மற்றும் சுருக்கங்களுக்கு வழிவகுக்கும்.

Hyaluronic Acid நன்மைகள்: Hyaluronic Acid சருமத்தில் ஈரப்பதத்தை ஈர்த்து வைக்கிறது. இது வறட்சியைக் குறைத்து சருமத்தை எப்போதும் மென்மையாக வைத்திருக்க உதவும். இது சருமத்தை லேசாக Plump செய்வதன் மூலம் முகச்சுருக்கங்களின் தோற்றம் குறைகிறது. மேலும் சருமத்தில் உள்ள காயங்களை ஆற்றுவதற்கு இந்த ஆசிட் உதவியாக இருக்கும். எனவே சீரம், மாய்ஸ்ரைசர் மற்றும் மாஸ்க் போன்ற பல்வேறு வகையான தயாரிப்புகளில் Hyaluronic Acid சேர்க்கப்படுகிறது. 

Hyaluronic Acid-ன் தீமைகள்: இதை முகத்திற்கு பயன்படுத்துவது பெரும்பாலும் பாதுகாப்பானது என்றாலும், இது காற்றில் உள்ள தண்ணீரை ஈர்த்து சருமத்தில் சேமிப்பதால், ஈரப்பதம் குறைவாக இருக்கும் காலநிலையில் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தலாம். சிலருக்கு இவை சரியாக வேலை செய்யாமல் சிவப்பு திட்டுக்கள், எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். 

இதையும் படியுங்கள்:
சரும வறட்சியை தடுக்க வீட்டில் உள்ள பொருட்களிலேயே தீர்வுகள் இருக்கு தெரியுமா?
Azelaic Acid Vs Hyaluronic Acid

எது நல்லது? 

Hyaluronic Acid எல்லாவிதமான சருமத்திற்கும் ஒரே மாதிரியாக வேலை செய்யும். ஏற்கனவே இருக்கும் சரும நிலைகளைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், Azelaic Acid முகப்பரு, சோராசியா மற்றும் மெலஸ்மா போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். குறிப்பாக இவற்றை பயன்படுத்துவதற்கு முன் முறையான தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது. 

இந்த இரண்டு ஆசிட்களும் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது என்பதால், உங்களது தேவைக்கு ஏற்ப இவற்றில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com