பருக்கள், கரும்புள்ளிகள் வராமல் தடுக்கும் கொத்தமல்லி!

Coriander prevents pimples and blackheads!
Azhagu krippugal
Published on

ம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகள்தான் முதலில் கவனிக்கப்படும். இது மிக முக்கியமானசரும பிரச்னைகளில் ஒன்று. ஏனெனில் இந்த பிரச்னைகளால் பலர் அவதிப்படுகின்றனர். இவை சருமத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்துகின்றன. 

அதனால்தான் கரும்புள்ளிகளைத் தடுக்கும் பேஸ் மாஸ்க்குகளை நாம் வெவ்வேறு வழிகளில் பயன் படுத்துகிறோம். வாங்க இந்த பதிவில் கொத்தமல்லி பேஸ் மாஸ்க்கை எப்படி செய்து, அதை எப்படி முகத்தில் அப்ளை பண்ண வேண்டும்? என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

புதிய செல்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. கொத்தமல்லியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இந்த வைட்டமின் ஏ சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைக்கிறது.

கொத்தமல்லியில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன.. இது சரும துளைகள் மற்றும் சுருக்கங்களை அழிக்க உதவுகிறது. இது அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பிற கறைகளை நீக்குகிறது. மேலும் கொத்தமல்லியில் இன்னும் பல விதமான அற்புதமான நன்மைகள் உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை. 

ஆனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை எப்படி நீக்குகிறது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் ஒரு கொத்து கொத்தமல்லியை எடுத்து நறுக்கி சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கப் தண்ணீரை சூடாக்கி, அந்த தண்ணீரில் கொத்தமல்லி இலைகளை சேர்த்து 15 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து, ஆறவைத்து, வடிகட்டி தனியாக வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் நீங்க இயற்கை வழிமுறை!
Coriander prevents pimples and blackheads!

இந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை சேர்க்கவும். ஆப்பிள் சைடர் வினிகர் இறந்த சரும அடுக்குகளை நீக்குகிறது. சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சரும நிறத்தை மாற்றுகிறது. இந்த தண்ணீரை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்க வேண்டும்.

இந்த திரவத்தைப் பயன்படுத்துவதற்கு முன், முகத்தை சுத்தமாக கழுவி, குளிர்ந்த பாலில் ஒரு பஞ்சு உருண்டையை நனைக்கவும். பின் அதிகப்படியான பாலை பிழிந்து, பருத்தியால் முகம் முழுவதும் துடைக்க வேண்டும். அதோடு சேர்த்து கழுத்தையும் துடைக்க வேண்டும். தோலில் உள்ள அழுக்கு மற்றும் தூசி பஞ்சில் ஒட்டிக்கொள்வதை நீங்கள் கவனிக்கலாம்.

பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். பிறகு மென்மையான டவலால் முகத்தை ஈரமில்லாமல் துடைக்கவும். சிறிது ஈரமாக வைத்தால் மாஸ்க் விரைவில் உறிஞ்சிவிடும். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் கொத்தமல்லி தண்ணீர் சேர்த்து இரண்டும் நன்றாக கலக்கும் வரை கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் முழுமையாக அப்பளை செய்ய வேண்டும். கொத்தமல்லி பேஸ் பேக்கை பயன்படுத்திய அரைமணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்..

இப்போது மற்றொரு காட்டன் பஞ்சை எடுத்து, அதில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்யவும். ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. சருமத்தை மிருதுவாக்கவும் செய்கிறது.

பிறகு லேசான மாய்ஸ்சரைசரை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த 10 நிமிடங்களுக்கு வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். சருமம் பளபளக்கும். கண்டிபாக இந்த பேஸ் பேக்கை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com