மூக்கின் அழகை கெடுப்பதே அதன் மேல் தோன்றும் கருப்பு மற்றும் வெள்ளையான ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ்தான். சிலருக்கு இது தாடைகளிலும் இருக்கும். இதனால் சருமத்தின் துவாரங்கள் அடைபட்டு வடும். ப்யூட்டி பார்லரில் போய் கூர்மையான பொருளால் அகற்றினால் திரும்பத் திரும்ப வரும். இதற்குத் தீர்வு தொடர்ந்து ஆவி பிடித்தல். தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் எலுமிச்சை சாற்றைத் சேர்த்து நன்கு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு ஒரு மிருதுவான துணியை வைத்து அழுத்தித் துடைக்க வேண்டும். தொடர்ந்து இப்படி ஆவி பிடிக்க துவாரங்கள் அடைபட்டது நீங்கி கொஞ்சம் கொஞ்சமாக ப்ளாக் ஹெட்ஸ் பிரச்னை குறையத் தொடங்கும். தொடர்ந்து வாரத்துக்கு இருமுறை இப்படி ஆவி பிடிக்க ப்ளாக் ஹெட்ஸ் நீங்கும்.
இன்னொரு முறையும் உள்ளது. தக்காளியை விதை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். கால் கப் பயத்தம் பருப்பு, கால் கப் கடலைபருப்பை ரவை போல் உடைத்து தக்காளிச் சாற்றில் இந்த பொடியை கலந்து ப்ளாக் ஹெட்ஸ் இருக்கும் இடத்தில் திக்கான பேக் போடவும் கால் மணிநேரம் கழித்துப் கழுவவும்.
அழகு சாதனத்தால் ஏற்படும் அலர்ஜிகள்:
மட்டமான நெயில் பாலிஷ் போட்டால் நகம் மஞ்சளாக மாறும். நகத்தின் அடிப்பகுதி அரித்துப் போகும்.
தரமில்லாத லிப்ஸ்டிக் உபயோகித்தால் உதடு வீங்கி கறுத்து கரும்புள்ளிகளும் காணப்படும்.
மட்டமான மஸ்காரா ஐ லைனர் பயன் படுத்தினால் இமைகள் உதிர்ந்துவிடும்.
தரமில்லாத ஷாம்பூக்களால் தலையில் கட்டிகள், முடி உதிர்தல் போன்ற பிரச்னை ஏற்படும்.
வாக்சிங் செய்த பிறகு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
ஸ்டிக்கர்களில் சிட்ரிக் அமிலம் கலக்காமல் உள்ளதா மற்றும் குங்குமத்தில் கலக்காமல் உள்ளதா என்பதை கவனிக்கவும்.
பெடிக்யூர், மெனிக்யூர், ப்ளாக் ஹெட்ஸ் ரிமூவர், டவல் சோப் ஆகியவற்றை ஒவ்வொருவரும் தனித்தனியே வைத்துக் கொள்வது நல்லது. அல்லது ஸ்டெரிலைஸ் செய்து பயன்படுத்தவும்.
கூந்தலை நீளமாக்கும் சிகிச்சை செய்யும்போது அளவுக்கதிகமான அமோனியா கூந்தலை பாதிக்கும்.