சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும் மோசமான உணவுகள்! 

itchy skin
Bad foods that cause itchy skin!
Published on

மனித உடல் என்பது ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டது. இது பல்வேறு உணவுகளுக்கு வெவ்வேறு விதமாக வினைபுறியும். சிலருக்கு சில உணவுகள் ஆரோக்கியமானவை என்றாலும், மற்றவர்களுக்கு அவை சருமத்தில் அரிப்பு, தடிப்பு மற்றும் பிற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும் சில பொதுவான உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். 

அரிப்பை ஏற்படுத்தும் உணவுகள்: 

  • சிலருக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், பால், தயிர், சீஸ் போன்ற பால் பொருட்கள் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்.‌ மேலும் முட்டை சாப்பிடுவதாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு பிரச்சனை ஏற்படலாம். 

  • இறால், நண்டு, மீன் போன்ற கடல் உணவுகள் சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை தூண்டி சருமத்தில் அரிப்பு, தடிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். கத்திரிக்காய் சாப்பிடுவதால் பலருக்கு அரிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. 

  • வேர்க்கடலை, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் சிலருக்கு ஒவ்வாமையை தூண்டி சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், சோயா பீன்ஸ் மற்றும் சோயா பொருட்களாலும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம். 

  • செயற்கை சுவைகள், செயற்கை நிறங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை மிகவும் மோசமானவை. இவற்றுடன் மதுபானங்களை சேர்த்து அருந்துவது ஒவ்வாமை பிரச்சினையை அதிகரிக்கும். 

  • காபி, தேநீர் மற்றும் சோடா போன்ற காஃபின் அதிகம் நிறைந்த பானங்கள் சிலருக்கு ஹிஸ்டமைன் அளவை அதிகரித்து, அரிப்புக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
லெக்டின் சத்து  நிறைந்த உணவு மற்றும் பழங்களை ஏன் குறைவாக சாப்பிட வேண்டும் தெரியுமா?
itchy skin

எனவே, உங்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும் உணவுகள் என்ன என்பதை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருக்கிறதா என சந்தேகம் இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் என உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்ணுவதால், இத்தகைய ஒவ்வாமை எதிர்வினை பாதிப்பிலிருந்து விடுபடலாம். 

இதன் மூலமாக உங்களது சருமத்தை பாதுகாத்து, என்றும் பொலிவுடன் நீங்கள் இருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com