
ஒரு சிலருக்கு தலையில் வழுக்கை விழுந்திருக்கும். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சமச்சீராக இல்லாத ஹார்மோன்கள், மன அழுத்தம், மற்றும் அலோபீசியா எனும் பாதிப்பினாலும் இப்படி ஏற்படலாம். பல நூற்றாண்டு காலமாக ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புகொண்ட வேப்பெண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து வழுக்கையை குணமாக்குகிறது.
இந்த வேப்ப எண்ணையில் லிமோனாய்ட்ஸ் என்ற ஆன்டிஆக்சிடண்டும், மற்றும் இதில் கொழுப்பு அமிலங்களும் முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய வகையில் செயல்படுகின்றன. தலைமுடியில் மண்டை எரிச்சலைப் போக்கி அரிப்பு மற்றும் பொடுகுப் பிரச்னையையும் போக்கி ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை வேப்பெண்ணெய் ஊக்குவிக்குகிறது.
தலைமுடியில் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றை நீக்குவதில் முக்கிய பங்களிக்கிறது வேப்பெண்ணை. செபோரெயிக் டெர்மாடிடிஸ் என்ற முடி மெலியும் பிரச்னையை இது தீர்க்கிறது.
தலைமுடியில் நன்றாக வேப்பெண்ணெய் மசாஜ் செய்து குளிக்க முடி நன்றாக வளரும். இந்த வேப்பெண்ணெய் தலைமுடியின் சீபத்தை கட்டுக்குள் வைப்பதால் தலைமுடி வறண்டு போகாமலும் அதே சமயம் எணணை பசையில்லாமலும் வைக்கிறது.
எப்படி உபயோகிப்பது?
3 டேபிள்ஸ்பூன் வேப்பெண்ணையை இலேசாக சூடு செய்யவும். இதோடு தேங்காய் எண்ணை, அல்லது ஜோஜோபா எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை யும் சேர்க்கவும். பிறகு நன்கு கலந்து தலைமுடியில் தடவவும். ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணையில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையோ ஜோஜோபா ஆயிலை யும் சேர்க்கலாம். சர்குலர் மோஷனில் முடியில் தடவவும். 2 மணிநேரம் ஊறிய பிறகு ஷாம்பூ போட்டு வாஷ் பண்ணலாம்.
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் இப்படிச் செய்துவர வழுக்கை பிரச்னை குணமாகும்.
நீங்கள் சுத்தமான வேப்பெண்ணையையே பயன்படுத்த வேண்டும்.
இந்த வேப்பெண்ணயின் மற்ற நன்மைகள்
பொடுகு மற்றும் வறண்ட தன்மையையும் குறைக்கிறது.
முடி உடைவதைத் தடுக்கிறது
தலைமுடிக்கு பளபளப்பைத் கொடுக்கிறது.
நீங்கள் தொடர்ந்து தலைமுடிக்கு வேப்பெண்ணைய் உபயோகிப்பதன் மூலம் முழுமையாக வழுக்கைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.