முடி வளர்ச்சிக்கு படானா ஆயில்!

Batana Oil
Batana Oil
Updated on

இது அமெரிகாவில் வளரும் பனை மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. தலைமுடிக்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் ஆயில் பயன்படுத்துவோம். அதே போன்று படானா ஆயிலும் முடிக்கு சிறந்தது. இந்த எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் முடி கொட்டுவதையும் தடுக்கிறது. இதில் அதிக அளவு கொழுப்பு அமிலம், ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் மற்றும் ஈ சத்து நிறைந்துள்ளன. மேலும் படானா ஆயிலில் ஒலிக் அமிலம் அதிக அளவில் இருப்பதால் வேர்க்கால்களை வலுவாக்கி முடியை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆராய்ச்சிகளின் படி, படானா ஆயில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சியைத் தூண்டுகிறதாக அறியப்படுகிறது.

படானா ஆயில் பலன்கள்:

ரிஃபைன்ட்டு செய்யப்படாத படானா ஆயிலை பயன்படுத்துவது சிறந்தது. அப்போதுதான் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்

இது அடர்த்தியாகவும் வெண்ணெய் போன்ற தோற்றத்துடன் இருப்பதால் இதைத் தலையில் தடவுவது சிரமமாக இருக்கும். அதனால் சூடான நீருக்குள் வைத்தால் இதை உருகிய நிலையில் தலைக்கு உபயோகிக்க முடியும்.

இந்த எண்ணையை சர்குலர் மோஷனில் வேர்க்கால்களில் பத்து நிமிடங்கள் நன்றாகத் தடவவும். இதனால் வேர்க்கால்கள் வலூவாகி முடி ஆரோக்கியமாகும்

30 நிமிடங்கள் கழித்து சல்பேட் இல்லாத ஷாம்பூ பயன்படுத்தி அலசவும்.

இந்த எண்ணெய் முடி உடைதல் மற்றும் பிளவுபடுதலைத் தடுக்கிறது. இந்த எண்ணை முடியை வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் வைக்கும்.

பக்க விளைவுகள்:

  • சிலருக்கு இது அரிப்பை ஏற்படுத்தலாம்.

  • இதை சரியாக அலசவில்லை என்றால் பொடுகுத் தொல்லை ஏற்படும்

முடி வளர்ச்சிக்கு கவனிக்க வேண்டியவை:

  • டீ ட்ரீ ஆயில், ரோஸ்மேரி ஆயில் மற்றும் எலுமிச்சை ஆயில் சில துளிகளோடு ஜோஜோபா எண்ணையையும் ஷாம்பூவில் சேர்த்து முடியை அலச முடி வளர்ச்சி அதிகமாகும்.

  • நீங்கள் சில்க் தலையணை உபயோகித்தால் முடி உடைதல் மற்றும் முடி கொட்டுவதை தடுக்கலாம்.

  • முடி வளர்ச்சிக்கு புரதம் மிக அவசியமானது. புரதம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

  • முடி பிளவைத் தடுக்க அவ்வப்போது முடியை ட்ரிம் செய்யவும்.

  • ஆலோவேரா ஜெல் கொண்டு மசாஜ் செய்வதால் முடி வளர்ச்சி அதிகமாகும்.

இதையும் படியுங்கள்:
சரும ஆரோக்கியத்திற்கு கொலாஜன் நிறைந்த பானங்கள் ஏன் அவசியம்?
Batana Oil

கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற எண்ணெய்கள்:

லாவெண்டர் ஆயில்:

அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்த இது முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடியது. அலோபீசியாவைத் தடுக்கக் கூடியது

பெப்பர் மிண்ட் ஆயில்:

முடியின் வேர்கள் கால்களை வலுப்படுத்தக் கூடியது.

ரோஸ்மேரி ஆயில்:

முடியை அடர்த்தியாக வளரச் செய்யக் கூடியது.

செடார் வுட் ஆயில்:

இது தலையில் ஆயில் க்லாண்டுகளை ஊக்குவித்து பொடுகு பிரச்னையிலிருந்து பாதுகாக்கும்.

டீட்ரீ ஆயில்:

அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்பு உள்ளதால் வளர்ச்சியைத் தூண்டி ஆரோக்கியமாக வைக்கிறது.

சாமோமைல் ஆயில்:

பளபளப்பும் மிருதுத்தன்மையும் அளிக்கிறது

சாண்டல் வுட் ஆயில்:

தலைமுடி பிளவைத் தடுத்து நல்ல நறுமணம் தருகிறது.

இதையும் படியுங்கள்:
அக்குள் கருமையை நீக்க கற்றாழையில் இருக்கு 5 வழிகள்!
Batana Oil
logo
Kalki Online
kalkionline.com