சின்னச் சின்ன அழகு குறிப்புகள் மூலம் கோடையை சமாளிக்கலாம்!

சரும பாதுகாப்பு!
சரும பாதுகாப்பு...
சரும பாதுகாப்பு...pixabay.com

கோடை வந்து விட்டாலே வெயிலில் தாக்கத்தால் சருமம் கருத்து போகத் தொடக்கி விடும். அதற்கு சிறு சிறு அழகு குறிப்புகளை கையாண்டால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும். அதற்கான ஐடியாக்கள் இதோ! 

ஸ்ட்ராபெரி பழச்சாறு இயற்கையாகவே தோலை பளபளப்பாகும் தன்மையுடையது. ஸ்ட்ராபெரி பழச்சாறையும் எலுமிச்சம் பழச்சாற்றையும் சம அளவில் கலந்து தினசரி குளிப்பதற்கு முன் முகம் ,கழுத்து, கை, கால்களில் தடவி ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தோல் பளபளப்பாகவும் சிவப்பாகவும் மாறும். 

நாள் முழுக்க அடுப்படியிலேயே வெந்து விட்டு திடீரென குளிர்ந்த நீரைக் கொட்டிக் கொள்வது சருமத்தை உலர்ந்து வெடிக்க செய்திடும் .அடுப்படியில் பணியாற்றுகிறவர்கள் வேலை முடிந்ததும் சுமார் 1/4 மணி நேரமாவது திறந்த வெளியில் அல்லது ஃபேனுக்கு அடியிலோ இளைப்பாறிய பின்னர் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

சூரிய வெப்பத்தால் முகம் கருத்து போவதையும் கரும்புள்ளிகள் விழுவதையும் தடுக்க முகத்தில் நன்றாக மோரை அவ்வப்போது தேய்த்துக் கொண்டு கண், மூக்கு ஆகியவற்றுக்கு செல்லாதவாறு பார்த்து 15 நிமிடம் அது ஊறிய பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவலாம். 

குளியல், கோடையில் இரண்டு முறை குளிப்பது அவசியம். இதனால் நம்முள் முடங்கி கிடக்கும் சோம்பல் அகன்று புத்துணர்ச்சியை தருகிறது. நம் தோலை சுத்தமாக்குவதோடு புதிய பொழிவையும் தருகிறது. சுடவைத்த தண்ணீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அது முடிந்தவுடன் கொஞ்சம் சாதாரண தண்ணீரில் குளிப்பது தோலுக்கு ஒளி வீசும் தன்மையை கொடுக்கும். 

சரும பாதுகாப்பு...
சரும பாதுகாப்பு...pixabay.com

ப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம் திராட்சை என்று நமக்கு கிடைக்கும் பல வகைகள் ஏராளம். இவற்றில் தினமும் இரண்டு, மூன்று பழங்களை சின்ன சின்னதாக வெட்டி கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் இந்த பழவகையில் கிடைப்பதோடு சருமமும் பளபளப்பாக மாறும். 

தோல் எளிதில் ஒவ்வாமைக்கு உள்ளாக கூடிய அவயம். ஆதலால் அதில் உபயோகப்படுத்தும் மருந்துகள் மற்றும் அலங்கார பொருட்கள் விஷயத்தில் அதிக கவனமாக இருப்பது நல்லது. வேர்க்குரு முதல் தோல் புற்றுநோய் வரை தோலை தாக்கும் நோய்கள் ஏராளம். ஆதலால் தோல் ஒவ்வாமை உள்ளவர்கள் எவ்வித தோல் நோயாக இருப்பினும் மக்காச்சோளம், பாகற்காய், கத்திரி, மீன், வரகரிசி போன்ற பொருட்களையும் புளிப்பு சுவையுடைய பொருட்களையும் தவிர்க்கவும் வேண்டும். புளிப்புச் சுவை உடையவற்றை சில சமயங்கள் சாப்பிடும் பொழுது மிகவும் குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது. 

இதையும் படியுங்கள்:
முகத்தில் பரு, கரும்புள்ளிகள் மறைய இவற்றை செய்தால் போதுமே!
சரும பாதுகாப்பு...

சூரிய ஒளியில் அல்ட்ரா வயலட் கதிரினால் சருமம் எளிதாக பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக கண்களை சுற்றிலும் உள்ள பகுதிகளில் மிகுதியான தாக்குதல் காணப்படுகிறது. சருமத்தின் வெளிப்புறம் சூரிய ஒளியினால் அதிகம் பாதிக்கப்பட்டால் சில நேரங்களில் தோல் புற்றினைக் கூட ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி கண்களின் கீழே உள்ள தசைகளில் இறுக்கத்தையும் கறுமையையும் படரச் செய்கிறது. இவற்றைத் தடுப்பதற்கு தரமான குளுமையான கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம். கண்களில் வெளிச்சம் படாதவாறு பாதுகாக்க கூடிய வகையில் குடை, மற்றும் குல்லா போன்றவற்றையும் பயன்படுத்தலாம். 

இதுபோல் சின்னச் சின்ன அழகு குறிப்புகளை பயன்படுத்தினால் கடும் கோடையையும் பிரச்சனை இன்றி சமாளிக்கலாம். தோலும் பளபளப்பாகும். அதிக செலவும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com