எண்ணெய் பசை உள்ள கூந்தல்:
சிலருக்கு எண்ணெய் பசை உள்ள கூந்தல் அமைப்பு இருக்கும். அளவுக்கு அதிகமான எண்ணெய் பசை இருப்பதுடன், முடி மிகவும் மெலிந்து காணப்படும்.
இந்த கூந்தலில் உள்ள எண்ணெய் பசையானது வெளியில் உள்ள தூசுகளையும், அழுக்குகளையும் கவரும் தன்மை உடையது. இதனால் கூந்தலில் பொடுகு உண்டாகும். எனவே இந்த கூந்தலை வாரத்திற்கு மூன்று முறையாவது இயற்கை ஷாம்பை கொண்டு அலசுவதன் மூலம் எண்ணெய் பசையைக் குறைக்கலாம். எண்ணெய்ப் பசை நிறைந்த கூந்தலுக்கு மருதாணி பேக் பயன்படுத்தினால் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.
இத்தகைய கூந்தல் உடையவர்கள் கீழே வரும் இயற்கை முறை ஷாம்பாக இதைப் பயன்படுத்தலாம். வெந்தயம், சோற்றுக்கற்றாழை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, புங்கங்காய் இவற்றை இடித்து, சிறிது தண்ணீர் கலந்து அடுப்பிலிட்டு நன்கு கொதித்தவுடன் இறக்கி வடிகட்டி உபயோகிக்கலாம். குறைந்தது ஐந்து நாள் வரை கெடாமல் இருக்கும். இத்துடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்தும் உபயோகிக்கலாம்.
எப்போதும் கூந்தலை சுத்தம் செய்யும்போது மயிர் கால்களையும் கவனத்தில் கொண்டு விரல் நுனிகளால் தேய்த்து தூய்மை செய்ய வேண்டும். தண்ணீர் நிறைய ஊற்றி தலையை நன்றாக அலச வேண்டும்.
கூந்தல் பேக்:
அதிக எண்ணெய் பசை உள்ள கூந்தலுக்கு எலுமிச்சை சாறு, வினிகர் இரண்டையும் கலந்து தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.