துவரம்பருப்பின் சில மருத்துவ பலன்கள்!

beauty tips...
beauty tips...

புரதச்சத்து நிறைந்த துவரம் பருப்பு உடலுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதோடு பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தோல், தலைமுடி, பாதம் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

துவரம்பருப்பு - 200கிராம், மஞ்சள் -10 கிராம் சேர்த்து மாவாக அரைத்து வாரம் ஒருமுறை முகத்தில் தேய்த்து குளித்து வர, கரும்புள்ளிகள், தேமல் போன்றவை மறையும்.

பெண்களுக்கு உதட்டுக்கு மேலே பூனை முடி மாதிரி வளர்ந்து அந்த இடம் கருமையாக இருக்கும். இதற்கு துவரம்பருப்பு -1/2கிலோ, கோரைக்கிழங்கு - 1/4கிலோ, கல்கண்டு - 50 கிராம் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தண்ணீரில் கலந்து 5 நிமிடம். ஊற விட்டு பின் கழுவ மீண்டும் முடி முளைக்காது. முளைத்த முடியும் உதிரும். நல்ல பலன் கிட்டும்.

துவரம்பருப்பு 2 கிண்ணம், வெந்தயம் -1கிண்ணம், தயிர் -1டீஸ்பூன் பூந்திக்கொட்டை -2 சேர்த்து இரவு ஊற விட்டு காலையில் அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம்  கழித்து அலசி குளிக்க, கூந்தல் பளபளப்பாகும் முடி வெடிப்பும் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
மஹாராஷ்டிராவில் ஒரு எவரெஸ்ட்! விசிட் அடிக்கலாம் வாங்க!
beauty tips...

துவரம் பருப்பு 1 டீஸ்பூன், மருதாணி இலை சேர்த்து அரைத்து தயிரில் கலந்து பாதத்தில் பற்று மாதிரி போட காய்ந்ததும் அலம்பினால் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு குணமாகும்.

சீயக்காய் -1 கிலோ, சுட்டு கருப்பான வசம்பு-10, துவரம்பருப்பு -1/4 கிலோ, வேப்பங்கொட்டை-20கிராம், உலர்ந்த நெல்லிக்காய் -100கிராம், வெந்தயம் -1/4 கிலோ, இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ந. எண்ணையில்1/4  டீஸ்பூன்  மிளகு போட்டு காய்ச்சி இறக்கி ஆறியதும் இதை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும்.பின் இந்த பவுடரை சுடு தண்ணீரில் கலந்து தலையில் பேக் ஆக போட்டு அரை மணி நேரம் கழித்து அலசவும். வாரம் ஒருமுறை இதை செய்து வர பேன், ஈறு இல்லாமல் முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com