

பொதுவாக குளிர் காற்று, குறைந்த ஈரப்பதம், அதிக வெப்பநிலை மாற்றம் காகாரமாக குளிர்காலத்தை சமாளிப்பது ஒவ்வொருவருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சரும பராமரிப்பு முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.முகம் மற்றும் உடலுக்கேற்ற மாய்ஸ்ரைசர்
குளிர்காலத்தில் சருமம் வெகு சீக்கிரமாக வறண்டு விடும் என்பதால், முகத்திற்கு கொழுப்பு சக்தி ( Fat Content) குறைவாக இருக்கும் மாய்ஸ்டரைசர்களையும், உடலுக்கு ஷியா பட்டர் உள்ள மாய்ஸ்டரைசர்களை பயன் படுத்துவது நல்லது.
2. மென்மையான கிளென்ஸர்
முகத்தை ஃபோமிங் கிளென்சர் நன்கு சுத்தம் செய்யும் என்றாலும் இயற்கை எண்ணெய் பசையை அகற்றி சருமம் வறண்டு விடும் என்பதால் குளிர்காலத்தில் மென்மையான கிளென்சர்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது.
3.ஸ்கிரப் செய்வது
பொதுவாக ஸ்கிரப் செய்வதை குளிர்காலத்தில் தவிர்த்து விடலாம். இல்லையென்றால் பத்து நாட்களுக்கு ஒரு முறை கடலை மாவு பச்சை, பயிறு மாவு கொண்டு சுத்தம் செய்வது போதுமானது.
4.சன்ஸ்கிரீன்
பொதுவாக பலரும் குளிர்காலத்திற்கு சன் ஸ்கிரீன் தேவை இல்லை என்று நினைப்பார்கள். ஆனால் மழைக்காலம், வெயில் காலம் ,குளிர்காலம் என அனைத்து காலங்களிலும் சன்ஸ்கிரீனை அவசியம் பயன்படுத்த வேண்டும்.
5.இயற்கையாக தயாரிக்கப்பட்ட லிப் பாம்
குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க வாசனை ,நிறம் சேர்க்காமல் ஷியா பட்டர் அல்லது பீட்ரூட் மூலம் இயற்கையாகவே தயாரிக்கப்பட்ட லிப் பாமை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
6.வெதுவெதுப்பான நீர் குளியல்
குளிர்காலத்தில் சுடச்சுட வெந்நீரில் குளிப்பதால் முடி, சருமம் என அனைத்திற்கும் எரிச்சலூட்டும் என்பதால் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே சரியானது.
7. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது
பெரும்பாலும் குளிர்காலத்தில் தாகம் எடுக்காது என்றாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் நீர் சத்துக்கள் குறைந்துவிடும் . ஆகவே உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறி முகத்தில் சுருக்கம் வராமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
8.செராமைடு, நியாசினமைடு, ஸ்குவாலீன், கற்றாழை
தோலுக்குப் பயன்படுத்தும் சீரம், க்ரீம், மாய்ஸ்ரைசர் இவற்றில் செராமைடு, நியாசினமைடு, ஸ்குவாலீன், கற்றாழை போன்ற பொருட்கள் இருப்பதாக பார்த்து வாங்குவது சாதாரண கிரீம்கள் வாங்குவதைவிட குளிர்காலத்திற்கு சிறந்தது.
9.வாழைப்பழம் அல்லது அவகேடா
மேற்கூறிய செய்முறைகள் அனைத்தையும் செய்தும் சருமம் உலர்ந்து போனால் முகத்திற்கு பாலுடன் வாழைப்பழம் அல்லது அவகேடாவை அரைத்து, பூசினால், இவற்றில் இருக்கும் ஈரப்பதம், சருமத்தை ஹைடிரேட்டாக வைத்துக்கொள்ளும்.
10.தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆர்கன் எண்ணெய்
குளிர்காலத்தில் குளிரின் காரணமாக தலைமுடி அதிகம் வறண்டு போகாமல் இருக்க தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆர்கன் எண்ணெயை மிதமான சூட்டில் எடுத்துக்கொண்டு தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் சீராகி முடி உதிர்வது குறைந்து விடும். அதன் பிறகு சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தி கழுவவேண்டும்.
11.கம்பளி ஆடைகள்
குளிர்காலத்தில் கம்பளி ஆடை அணியும்போது உள்ளே காட்டன் துணிகளை வைத்து தைப்பதால் சருமம் எரிச்சல் அடையாமல் பாதுகாக்கப்படும்.
12.கிளென்ஸர், மாய்ஸ்ரைசர், சீரம்
காலை இரவு என இரண்டு வேளைகளிலும் கிளென்ஸ்டர் , மாய்ஸ்ரைசர், சீரம் பயன்படுத்துவதால் சருமம் ஈரப்பதத்தைத் தக்கவைத்து பாதுகாக்கும்.
மேற்கூறிய முறைகளை தினந்தோறும் தவறாமல் கடைபிடித்தால் முகம் பொலிவாக காட்சி தரும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.