இயற்கை முறையில் முகம் ஜொலிக்க... எளிய ஃபேஷியல் டிப்ஸ்!

facial treatment
natural herbs facial treatment
Published on

ஸ்தூரி மஞ்சள் தூள் அஞ்சு கிராம் சந்தன தூள் அஞ்சு கிராம் வசம்பு பொடி 2 கிராம் எடுக்கவும் எல்லா வற்றையும் பாதாம் எண்ணையில் குழைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு இளம் சூடான நீரில் முகத்தை கழுவும் வாரம் இரு முறை இவ்வாறு செய்தால் முகம் புத்துணர்வு பெறும்.

காய்ந்த ஆவாரம்பூ பொடி காயவைத்த புதினா இலை பொடி கடலை மாவு பாசிப்பருப்பு எல்லாம் சம அளவில் எடுத்து ஆலிவ் எண்ணெயில் நன்கு குழைத்து முகத்தில் பூச வேண்டும் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இதை அவ்வப்போது செய்தால் முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் என்றும் இளமை பொலிவுடன் இருக்கலாம்.

ரண்டு துண்டு நாட்டு தக்காளி, புதினா சிறிதளவு எடுத்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து முகத்தில் பூச வேண்டும் 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ வேண்டும் முகச்சுருக்கங்கள் நீங்கும் இந்த வெஜிடபிள்ஃபேஷியலை   காலை நேரத்தில் செய்வது நல்லது.

ன்னாரி 10 கிராம் காய்ந்த ரோஜா இதழ் பத்து கிராம் வெந்தயம் ரெண்டு டீஸ்பூன் சந்தனத்தூள் ரெண்டு டீஸ்பூன் 10 கிராம் காய்ந்த எலுமிச்சை தோல் பத்து கிராம் இந்த எல்லாவற்றையும் முந்தின நாள் இரவே அளவான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் மறுநாள் காலையில் அரைத்து இத்துடன் முட்டையின் வெள்ளை கருவையும் கலந்து நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும் அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும் சரும பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்யும் நேச்சுரல் ஃபேஷியல்  இது.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான சருமத்திற்கான அன்றாடப் பழக்கங்கள்!
facial treatment

தோல் நீக்காத முழு பச்சை பயிறு இரண்டு டேபிள் ஸ்பூன் நடுநரம்பு நீக்கி எலுமிச்சை இலை இரண்டு வேப்பிலை ஒரு கைப்பிடி துளசி நான்கு ஐந்து பூலாங்கிழங்கு ஒன்று ரோஜா மொட்டு ரெண்டு கசகசா அரை சிட்டிகை இவற்றை அளவான தயிரில் முந்தைய நாள் இரவே ஊற வைக்க வேண்டும் மறுநாள் அரைத்து பசை போல ஆக்க வேண்டும் இதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து கலக்க வேண்டும் இதை முகத்தில் பூசிய அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு குளிக்க வேண்டும் இது முகத்தை மிருதுவாகி பளபளப்பு தரும்.

ப்பிள் பழத்தின் தோலை நீக்கிவிட்டு நன்றாக மசிக்க வேண்டும் அதனுடன் சிறிது தேன் ஓட்ஸ் பவுடர் கலந்து முகத்தில் பூச வேண்டும் அரை மணி நேரம் ஊரை விட்டு பிறகு முகம் கழுவ வேண்டும் வறண்ட சருமத்தை புதுப்பொலிவு பெறச் செய்யும் ஃபேஷியல்.

இதையும் படியுங்கள்:
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை... பயோட்டின் செய்யும் அதிசயங்கள்!
facial treatment

வெந்தயமும் நன்னாரியும் உள்ளங்கை அளவு எடுத்து கழுவி விட்டு முந்தின நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் மறுநாள் இதனுடன் ரோஜா இதழ் சந்தனத் தூள் காய வைத்து பொடியாக்கிய எலுமிச்சை தோல் செஞ்சந்தனம் இவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் பூச வேண்டும் அரை மணி நேரம் கழித்து பாசிப்பருப்பு மாவு போட்டு முகத்தை கழுவ வேண்டும் முகப்பரு உஷ்ணம் கட்டிகள் கருவளையம் முகவறட்சி என அனைத்தையும் நீக்கி முகத்தை பொலிவாகும் ஃபேஷியல்.

-ஆர். ஜெயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com