
பல ஆண்டுகளாக வாசலீன் அழகுசாதனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வறண்ட மற்றும் எண்ணெய் சருமம் உள்ள இரண்டு வகையினருக்கும் ஏற்றது.
இதன் நன்மைகள்
இது உடலை நல்ல நீரேற்றத்துடன் வைக்கிறது. உடலில் ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் சிறந்த மருந்து. நம் உதட்டை வறண்டு விடாமல் வெடிப்பில் இருந்து காக்கிறது.
சிலருக்கு அரிப்பு ஏற்படும்போது சருமத்தில் இருந்து தோல் உதிரும். இது வறட்சியால் ஏற்படுகிறது. வாசலீன் இதைத் தடுக்கிறது. அழகு சாதனத்தில் முக்கிய பொருளாக கருதப்படுகிறது.
உதட்டிற்கு பளபளப்பு தருகிறது. மேக்கப்பைக் கலைக்க இது உதவுகிறது. புருவங்களில் தடவ வளர்ச்சியை தருகிறது.
இதை மற்ற மேக்கப் சாதனங்களோடு கலந்து பயன் படுத்த நல்ல பொலிவைத் தருகிறது
நீங்கள் உடலுக்கு வாசனை திரவியம் தடவுவதற்கு மூன் இதை தடவி பிறகு திரவியத்தை தூவ அவை வெகு நேரம் இருக்கும். இது முகத்துவார அடைப்பை நீக்குகிறது.
வாசலீன், பெற்றோலியம் ஜெல்லி என்ன வித்யாசம்?
வாசலீன் என்பது நல்ல பெட்ரோலியம் ஜெல்லியுடன் cmicrocrystalline மெழுகு சேர்த்துத் தயாரிக்கப் படுகிறது. ஆனால் பெட்ரோலியம் ஜெல்லியோ இயற்கையான பெட்ரோலியத்துடன் ஹைட்ரோகார்பன் சேர்த்துத் தயாரிக்கப் படுகிறது. வாசலீன் நல்ல வாசனையுடன் இருக்கும். ஆனால் பெட்ரோலியம் ஜெல்லியில் எண்ணை வாசனை இருக்கும்.
இரவில் முகத்தில் வாசலீன் தடவுவதால் நீரேற்றமாக இருக்கும். தோல் பிரச்னைகளான சோரியாஸிஸ் மற்றும் எக்சீமா போன்றவற்றிற்கும் சிறந்த தீர்வாகும். நீங்கள் டாட்டூ போட்டுக் கொண்டால் அதை காயபில்லாமல் காக்க வாசலீன் உதவுகிறது. கால் வெடிப்புகளில் வறட்சியை நீக்குகிறது. இரவில் இதை கால் வெடிப்புகளில் தடவிவர அவை மறையும்.
பெட்ரோலியம் ஜெல்லியின் நன்மைகள்
புண்களை ஆற்றும் குணம் உண்டு. முகம் கை கால்கள் மிகவும் வறண்ட நிலையில் இருந்தால் இதைத்தடவ நீரேற்றமாக இருக்கும்.
கால்களில் பித்த வெடிப்பின் சந்தைக்கு பெட்ரோலியம் ஜெல்லி சிறந்த தீர்வாகும். உதடு வெடிப்புகளில் தடவ அவை குணமாகும்.
குழந்தைகளுக்கு டயபர் போடுவதால் ஏற்படும் பாதிப்பை நீக்க இதை தடவலாம்.
மேக்கப்பை கலைக்க பயன்படுத்தலாம்.
முடிப்பிளவை தடுக்க முடியில் பயன்படுத்தலாம்.
நீங்கள் வாசனை திரவ்யம் பயன்படுத்தும் முன்சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவி பிறகு பயனாபடுத்தினால் வாசனை அதிக நேரம் இருக்கும்.