
ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் சிலருக்கு கன்னங்கள் பருத்து, டபிள் சின் ஏற்பட்டு பார்க்க நன்றாக இருக்காது. சதைகள் நிறைய சேர்ந்து வயதான தோற்றத்தை தரும். இதை எளிய வகையில் வீட்டிலிருந்தே சில பயிற்சிகள் செய்து குறைத்து கன்னங்களை அழகாக்க லாம்.
தாடை பயிற்சி
தலையை பின்னோக்கி சாய்த்து,மேலே பார்க்க வேண்டும்.உங்கள் கன்னத்திற்கு கீழே இருப்பதை உணர, கீழ் தாடையை முன்னோக்கி அழுத்தவும். இதனால், கன்னம்,கழுத்து பகுதியில் உள்ள சருமம் இழுக்கப்படுவதை உணரலாம். இதை தினசரி பத்து முறை செய்யலாம்.
பந்தை வைத்து அழுத்துதல் பயிற்சி
ஒரு பந்தை எடுத்து அதை தாடைக்கு கீழே வைத்துக் கொள்ளவும். அதை கழுத்து மற்றும் தாடைக்கு இடையே வைத்து அழுத்தவும். இதை தினமும் சில நிமிடங்கள் செய்து வர கழுத்து, கன்ன தசை நன்கு குறையும்.
தலையை பின்னோக்கி சாய்த்து சீலிங் கை பார்க்கவும். முத்தமிடுவதுபோல உதடுகளை குவித்துக்கொள்ளவும். இதனால் உங்கள் கன்னம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் இழுக்கப்படும். ஐந்து வரை எண்ணி விட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும். இதை 10-15 முறை செய்யலாம்.
உங்கள் நாக்கை நன்றாக வெளியில் நீட்டி அதை மேல் நோக்கி சுழற்றி உங்கள் மூக்கை தொட முயற்சி செய்யுங்கள். இதேபோல் பத்து எண்ணிக்கை எண்ணி விட்டு பின் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விடவும்.
தலையை பின்னோக்கி சாய்த்து சீலிங் கை பாருங்கள்.நாக்கை வாயின் மேல் வைத்து அழுத்தவும். அதே நிலையில் 10-15விநாடிகள் வைத்திருந்து பின் இயல்பு நிலைக்கு திரும்பவும்.இதை தினமும் பத்து முறை செய்யலாம்.
தலையை பின்னோக்கி சாய்த்து சீலிங் கை பாருங்கள். மேல் நோக்கி பார்த்தவாறு தலையை வலது புறம் திருப்பவும். இந்த நிலையில் தாடை பயிற்சியை செய்யவும். அதே நிலையில் ஐந்து விநாடிகள் இருந்து விட்டு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பவும். இதை இடது புறமும் செய்யவும். இதே போல் ஒவ்வொரு பக்கமும் ஐந்து முறை செய்யவும்.
இந்த பயிற்சிகளை ரெகுலராக செய்து வர கன்னம் தசைகள் குறைந்து கன்னம் அழகான வடிவத்தில் இருக்கும்.
எனக்கு டபுள்சின் இருந்தபோது என் ப்யூட்டிஷியன் சொன்னதை செய்து பலன் பெற்றேன். அதை தொகுத்து எழுதியுள்ளேன்.