
நம் கண்களுக்கு அடியில், எந்தவித பாரபட்சமுமின்றி, அனைவருக்கும் உண்டாவது கருவளையம். இதற்கான காரணங்கள் போதுமான தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, ஸ்ட்ரெஸ், அதிகமான குடிப்பழக்கம், புகை பிடித்தல், வயதாவது, பரம்பரை, அலர்ஜி, அதிக வெயில் உடம்பில் படுதல் என பலவற்றைக் கூறலாம். இதை குணப்படுத்த மருத்துவரை அணுகலாம் அல்லது கண்களுக்கு அடியில் தென்படும் இரத்த நாளங்கள் மீது ஈரமான காட்டன் துணியை வைத்து எடுக்கலாம்.
உருளைக்கிழங்கு ஜூஸை கருவளையத்தின் மீது தடவி வைப்பது நல்ல நிவாரணம் தரும். இதிலுள்ள வைட்டமின் C ஆன்டி ஆக்சிடன்ட்டானது கண்கள் அருகில் உள்ள சருமம் பிரகாசமடைய உதவும். வைட்டமின் B வீக்கங்களைக் குறைத்து ஸ்கின் டோன் மேன்மையடையச் செய்யும்.
பொட்டாசியம் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்து ஈரத் தன்மை குறையாமல் பாதுகாக்கும். பொட்டேட்டோ ஜூஸில் உள்ள கேட்டச்சோலேஸ் (Catecholase) என்ற என்ஸைம் சருமத்தை மிருதுவாக்கவும் கருவளையத்தின் நிறத்தை மங்கச் செய்யவும் உதவும். மேலும் வீக்கங்கள் குறைந்து பள பளப்பான காம்ப்ளெக்ஷன் பெறவும் செய்யும்.
பொட்டேட்டோ ஜூஸில் உள்ள மாவுச்சத்து உப்பியிருக்கும் கண்களின் வீக்கத்தை இயற்கை முறையில் குறைக்க உதவும். உப்பிய கண்களுக்குள் உள்ள நீரை இந்த ஜூஸ் உறிஞ்சிகொண்டு வீக்கம் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடும். இந்த ஜூஸை கருவளையத்தின் மீது தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவி விட, ஜூஸில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கரு வளையம் மறைந்து பிரகாசமான தோற்றம் பெற உதவும்.
பொட்டேட்டோ ஜூஸில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கரு வளையம், சுருக்கங்கள் மற்றும் ஃபைன் லைன் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். வைட்டமின் C, மற்றும் வைட்டமின் B6 ஆகியவை சருமத்திற்கு நல்ல ஊட்டம் கொடுத்து சருமம் ஆரோக்கியமடையவும் மினு மினுப்புப் பெறவும் உதவும்.
பொட்டேட்டோவை வேகவைத்து மசித்து அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கலந்து கண்ணைச் சுற்றிலும் முகத்திலும் மாஸ்க்காகப் போட்டுக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட முகம் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் பெறும்.
வீட்டிலேயே தயாரித்து உபயோகிக்கக் கூடிய இந்த பொட்டேட்டோ ஜூஸ் மருத்துவத்தை அனைவரும் செய்து உபயோகித்து பலன் பெறலாம்.