பெண்கள் தினசரி தங்கள் தலையை வாரி மணமுள்ள ஏதாவது ஒரு பூவைத் தலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் தனிக் கவர்ச்சி கிடைக்கிறது. பூவை தினசரி தலையில் வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு பூவையர் என்று பெயர்.
கூந்தல் அடர்த்தியாக இருந்தால், பெண்களுக்கு அது அதிக அழகு. அடர்த்தியாக வளர தேன், வெள்ளரிக்காய், ஆப்பிள் பழம், அன்னாசிப்பழம், கோதுமை ஆகியவைகளை முடிந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிட வேண்டும்.
அடிக்கடி தலைவலி மாத்திரைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு கூந்தல் கொட்டும்.
கூந்தல் பிசுபிசுவென்று இருந்தால் எலுமிச்சம்பழச்சாறை தலையில் சிறிது தடவி விட்டு, கசக்கி விட்டு சிகைக்காய் போட்டு மறுபடியும் கசக்கிப் குளிக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை சீப்பில் உள்ள அழுக்கை கழுவி துடைக்க வேண்டும். இல்லாவிட்டால் சீப்பில் உள்ள அழுக்கு மீண்டும் தலையில் படியும்.
கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்து ஆறியப்பின் தலையில் நன்றாக தேய்க்கவேண்டும்.
நல்ல வாசனையுள்ள தேங்காய் எண்ணெய் ஷாம்பூவை மட்டுமே கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும்.
இளநரை வராமல் இருக்க கடுக்காயைக் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் ஊறவைத்து தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் இளநரை சிறிது சிறிதாக மாறி விடும்.
ஹேர் ஆயில்கள் தேய்ப்பதால் தலைமுடியின் ஆயுளை குறைத்து விடும். சுத்தமான தேங்காய் எண்ணெயும், நல்லெண்ணெயும் தவிர வேறு எதையும் தலையில் பட விடக்கூடாது.
கூந்தலை பின்னாலிருந்து வாரித் தூக்கி நாரதர் முடியைப்போல உச்சந்தலையில் கொண்டைப் போட்டு கொள்வதுதான் இப்போது மேல் நாடுகளில் ஃபேஷன்.
கூந்தலுக்குச் சாயம் போடக்கூடாது. சாயம் போட்டால் முடிக்கொட்டி விரைவில் வழுக்கையாகிவிடும்.
கூந்தலை அழகாக வைத்துக்கொள்ள விட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அடிக்கடி காற்றோட்டமான இடங்களில் உலாவ வேண்டும். எளிய தேகப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கூந்தல் ஈரமாக இருக்கும்போது தலையை வாரக்கூடாது.
தலையில் எண்ணெய் தேய்கும் போது விரல்களின் நுனியால் தலையில் அழுத்தி பிடித்து விட்டுத் தேய்க்க வேண்டும். அப்படி செய்தால் கூந்தல் எண்ணெய் பசையுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
கூந்தல் அடர்த்தியாக நீண்டு வளர்வதற்கு எப்போதும் கூந்தலைக் பின்னிப் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும். தினசரி கொண்டை போட்டால் முடி அடர்த்தியாக வளராது. கொண்டை எப்போதாவது போட்டுக் கொள்ளலாம்.
கூந்தலுக்கு சிகைக்காய் மட்டும் போட்டுத் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு கூந்தல் எப்போதும் அழகாக, ஆரோக்கியமாக இருக்கும்.
சுத்தமான பசு மோரினால் வாரத்துக்கு ஒரு முறை கூந்தலை கழுவ வேண்டும். கூந்தல் பளபளப்பாக வளரும். வடநாட்டு கிராமப் பகுதிகளில் இன்றும் இந்த பழக்கம் இருக்கிறது.
வெண்ணெயை தலையில் தடவி குளிக்கும் பழக்கம் இன்றும் கேரளர்களிடம் இருந்து வருகிறது.
கருவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி அந்த எண்ணெயை தலை முடிக்கு தடவி வந்தால் தலைமுடி கன்னங்கரேல் என்று அடர்த்தியாக வளரும்.
இந்த பராமரிப்புகள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவும்.