இரவில் இந்த ஒரு பொருளை முகத்தில் தடவினால் போதுமே!

Glycerin for face
Glycerin for face
Published on

இன்றைய காலத்தில் தவறான உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம், சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் சருமம் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக பலவிதமான சருமப் பராமரிப்பு பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கிளிசரின். இது ஒரு நிறமற்ற, மனமற்ற, பிசுபிசுப்பான திரவமாகும். இது தாவர எண்ணெய்கள், விலங்கு கொழுப்புகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகிறது. இந்தப் பதிவில் இரவில் முகத்துக்கு கிளிசரின் தடவுவதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

கிளிசரின் என்பது ஒரு வகையான Humectant. அதாவது ஈரப்பதத்தை ஈர்த்து தக்கவைக்கும் பொருள். கிளிசரின், காற்று மற்றும் தோலின் ஆழமான அடுக்குகளில் இருந்து தண்ணீரை ஈர்த்து அதை மேற்பரப்புக்கு இழுக்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

இரவில் முகத்துக்கு கிளிசரின் தடவுவதன் நன்மைகள்: 

கிளிசரின் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சியைத் தடுக்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் சருமம் வறண்டு வெடிக்கக் கூடிய சூழ்நிலையில், கிளிசரின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிளிசரின் சருமத்தை மென்மையாக்கி உதட்டில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது. 

சருமத்தை இளமையாக வைத்திருக்க கிளிசரின் உதவுகிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து நுண்ணிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதை தடுக்கிறது. கிளிசரின் பயன்படுத்துவதால் சருமம் வெளிப்புற மாசுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டு, சரும தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும், இது சருமத்தை பிரகாசமாக்கி சருமத்தின் நிறத்தை சீரமைக்க உதவுகிறது. 

இரவில் முகத்தில் கிளிசரின் தடவலாமா? 

இரவில் முகத்தில் கிளிசரின் தடவுவது பெரும்பாலும் பாதுகாப்பானது. கிளிசரின் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதால், இரவில் தூங்கும் போது சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது.‌ ஆனால், சில சந்தர்ப்பங்களில் இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, கிளிசரினை முதன்முறையாக பயன்படுத்தும்போது சிறிய பகுதியில் தடவி பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.‌ 

இதையும் படியுங்கள்:
பண்டிகைக் காலங்களில் முக அழகைப் பராமரிக்க உதவும் அழகுக் குறிப்புகள்!
Glycerin for face

கிளிசரினை நேரடியாகவோ அல்லது பிற பொருட்களுடன் கலந்து பயன்படுத்தலாம். கிளிசரின் சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அல்லது நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் மாய்ஸ்சரைசரில் சிறிதளவு கிளிசரின் கலந்து பயன்படுத்தலாம். மேலும், இதை பால், தேன் போன்றவற்றுடன் கலந்து ஃபேஸ் பேக் போலவும் பயன்படுத்துவது நல்லது. 

கிளிசரின் சரும ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் ஒரு இயற்கை பொருள். இது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்கிறிருக்கிறது.‌ இரவில் முகத்துக்கு கிளிசரின் தடவுவது சருமத்திற்கு ஆரோக்கியமானது. இருப்பினும், நீங்கள் புதிதாக இதைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் ஒரு சரும நிபுணரை கலந்தாலசிப்பது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com